QUOTES ON #பக்குவம்

#பக்குவம் quotes

Trending | Latest
9 JUL 2021 AT 21:46

எடுத்து சொல்லும் பக்குவங்களை
ஏறெடுக்க விடாமல் இழுத்து
போகும் மழலை பிடிவாதங்கள்...
மனதை நார் நாராய் கிழித்து
தொங்க விட்ட பின்பு தான்
ஓய்வெடுக்க துவங்குகின்றன...!

-


19 MAR 2021 AT 8:58

அறிமுகமில்லாத போது
பின்தொடர்ந்தேன்...
பழக்கம் ஆன பின்பு
இணைந்து பயணித்தேன்...
பக்குவமடைந்த பின்பு
ஒதுங்கி நின்று வேடிக்கை
பார்க்க துவங்கி விட்டேன்...
அவ்வளவே எனக்கும் இந்த
வாழ்க்கைக்குமானது...!

-



பழமை அறிந்திடா இளைய தலைமுறை...
பாதை மறந்து போதையில் விழுகிறது...!
இருளில் நடந்திடும் இளைஞர் கூட்டமோ...!
இல்லாத முகவரியை இலக்காய் தேடுகிறது...!

-



பிரிந்த பின்னும்
பக்குவம் வரவில்லை
இந்த அன்பில் மட்டும்
இன்னும் யாரோ ஒருவரின்
அன்பிற்கு ஏங்க தான் செய்கிறது

-


23 OCT 2020 AT 15:34

பரந்து விரிந்த வானத்தில்..

பறந்து உதிர்ந்த சிறகு நான்..!

பழகித் திரிந்த பாதையில்..

பதறிப் போய் வீழ்ந்துவிட்டேன்..!

பதம் பார்த்த தோல்விகளை..

பரீட்சித்து தெளிந்து விட்டேன்..!

பக்குவமான மனதுடன் மீண்டும்..

பறந்திட எழுந்துவிட்டேன்..!

-


15 MAY 2020 AT 23:07

பக்குவம் சொல்கிறது
சிலவற்றிற்கு பதில்
அளிக்காமல் நகர்ந்திட
சொல்லி...!

-


12 MAR 2020 AT 20:47

யாரேனும்
ஒருவரிடம் வழிந்து,நெளிந்து,
குழைந்து,தொலைந்து,உடைந்து,
சிதைந்து சிதறிய பின்னரே மார்தட்டிக்கொள்கிறது பக்குவப்பட்டுவிட்டதாய்
இந்த மனம்.

-


7 FEB 2020 AT 10:34

ஆண் அவசரத்தின் அடையாளமாம்
பெண் பக்குவத்தின் அடையாளமாம்

கூடல் பொழுதின் உன் அவசர நகர்வுகளை
என் மென்முத்தங்கள் கொஞ்சம் பக்குவப்படுத்தட்டும் !!

-



மனதை பண்படுத்த
பக்குவம் தேவைபடுகிறது

பக்குவம் என்ற ஒன்று
வந்த பிறகு வீணாய்
பேசுவதில்லை மனம்


-


18 FEB 2021 AT 8:37

பக்குவத்தை அடையவே
ஒரு சில பிரிவுகள் நேரிடுகிறது வாழ்க்கையில்...

-