நீ எனக்கில்லையென
உரக்கச் சொல்லியது
பகுத்தறிவென்றாலும்
ஒத்துழைக்க மறுக்கிறது
சிதைந்துபோன
என் சிற்றறிவு !-
நமக்கு ஒவ்வொருவரும்
ஒன்றை போதிக்கின்றனர்...!
அதில் எதை நாம் கேட்க்ககூடாது
என்பதில் மட்டும்
நாம் தெளிவாக இருக்க வேண்டும்...!
மதத்தையும் சாதியையும்
எவன் ஒருவன் போதிக்கிறானோ...!
அவனை விட்டு
விலகியே இரு....!
ஏனெனில்,
அவன் சராசரி மனிதன்
மனநிலையில் இல்லை...!
அவன் மனநிலை
பாதிக்கப்பட்வன்...!
💞க.கொ.மணிவேல்...🖋️
-
நான் கோயில்
கருவறையில் இல்லை...
நீ கொடுக்கும்
காணிக்கையில் இல்லை...
உன் கருணையில்
நான் உள்ளேன்...
-கடவுள்
-க.கொ.மணிவேல்...🖋-
பல கோடி மக்களின் (சுர்ஜித்)
வேண்டுதலை ஏற்க்காத நான்....
நீ கொடுக்கும்
ரூ.10 அர்ச்சனையை
ஏற்க்க போறேன்...
பைத்தியக்கார மனிதனே...
-கடவுள்
-க.கொ.மணிவேல்...🖋
-
ரூ.5வழிபாடு தட்டு
செய்தாலும் சரி
ரூ.5கோடிக்கு கீரிடம்
செய்தாலும் சரி...
நீங்கள் வேண்டுவது
எல்லாம் நடந்திடாது...
நான் இல்லை என்று
சொல்லவில்லை...
நான் இருப்பதாக சொல்லி
எதையும் செய்யாதீர்கள்...
-கடவுள்
-க.கொ.மணிவேல்...🖋-
தொண்டு செய்து
பழுத்த பழம் ...
தூய தாடி
மார்பில் விழும் ...
மண்டை சுரப்பை
உலகு தொழும் ..
மனக்குகையில்
சிறுத்தை எழும் ..
அவர்தாம் பெரியார் ..பார் ..
அவர்தாம் பெரியார் ...
எழுதியவர் -பாரதிதாசன்
-
எட்டாக் கனியையும்
எட்டி விடலாம்
ஏட்டினை புரட்டி
எழுத்தினை மதித்து
பகுத்தறிவை வளர்த்தால்-
கரோனா கடவுள்..
விதியே விதியே என்னசெய்யப் போகிறாய்..
மதியும் மதியும் இன்றுவிழித்துக் கொண்டதே..
சதியும் சதியும் நோய்தொற்றுப் பரவியதே..
கதியும் கதியும் இனிஎப்போதும் இப்படித்தானே..
சேதியும் சேதியும் கொரோனோ சொன்னதே..
சுதியும் மதியும் இனிஒன்றாகச் சேர்ந்திடுமே..
சோதியும் சோதியும் ஆராய்ந்துப் பார்த்ததே..
திதியும் துதியும் கவசம் அணிந்துகொண்டதே..
பீதியும் பீதியும் மக்கட்குஅறிவைப் புகட்டியதே..
நீதியும் நீதியும் நல்பகுத்தறிவை உணர்த்தியது..
-
பொறாமை
என்னும் தீ
போர்க்களமாய்
மாறுவதற்குள்
அதனை
தீயிட்டு
அழிப்போம்.
இங்கு போட்டியால்
வீழ்ந்தவர்களை விட
பொறாமையால்
வீழ்ந்தவர்கள்
அதிகம்.
-