தன்னம்பிக்கை
தலைகனம்
தனிமைப்படுத்தும்...
தன்னம்பிக்கை
தனித்திறமையால்
தனிமைபடுத்தும்...
தலைகனம்
தனிமையில் நிறுத்தும்...
-க.கொ.மணிவேல்...🖋-
தன்மானத்தை பெரிதும்
மதிப்பவனை...!
தன்னை மதி என
தலைகனம் கொள்கிறது...!
மதிப்பு மிக்க
மனிதன் மண்டியிடுகிறான்...!
மதிப்பற்ற பணத்திடம்...!
-க.கொ.மணிவேல்...🖋-
தான் சொல்வது மட்டுமே
சரியென்றும் ,
தனக்கு மட்டுமே
எல்லாம் தெரியுமென்ற ..
நினைப்பே ..
தலைக்கனத்தால்,
தரை விழ போகும் ..
காலம் வந்து
விட்டதற்கான ,
அறிகுறி ..-
சுயநலத்திற்கும்
தலைக்கனத்திற்கும்
நெருங்கிய
தொடர்பிருப்பது
தெரியாமலேயே
இருவருடனும்
பழகிக்கொண்டு
இருக்கிறேன்.
நான் சுயநலமான
தலைக்கனம்பிடித்த
முட்டாள்மனிதன்.-
தலைகனத்தால்
அழிந்ததாய்
சரித்திரமுண்டு!
தமிழ்கனத்தால்
அழிந்ததாயில்லை💪
-
தடுமாற்றம் இல்லா தலைகனத்தில் இருந்தேன்...,
உன்னை காணும் வரை...-
எனக்கு தெரியும் என்பதில் தொடங்கி ,
எவனுக்கு தெரியும் என்பதில் ஆரம்பமாகிறது தலைக்கனம் !-
தலைகனம் ஏறிய அறிவாளியாய் இருப்பதை விட ,
அன்பான முட்டாளாக இருப்பதே மேல் !-
யார் ஒருவர், தான் செய்த
எந்த ஒரு பெரும் செயலாக
இருந்தாலும், சரியே'
அதனை சிறுமையாகவே
எண்ணுகிறார்களோ'
அவர் ஒருவரே,
அனைத்தும்மான செயலையும்'
எளிதாக செய்யும்
வல்லமை பொருந்தியவராக
ஆகிறார்.-