முதலில் இந்த வாட்ஸ்அப் ஒழிக்கணும்.
ஒரே லவ் ஸ்டேட்டஸ் போட்டு கடுப்பு ஏத்திட்டு இருக்காங்க. 😡😁🤭-
தனி மரம்
தோப்பு
ஆகாது தான்..
ஆனாலும்
தனி மரம்
நிழல் தரும்..
மரத்தை தேடி
வருவோருக்கு..-
தனிமரம் தோப்பாகாது...!!
ஆனால் அந்த தனிமரத்துக்குள் தோப்பளவு எண்ணங்கள்.
கொஞ்சம் நாள் தங்கிவிட்டு விரும்பிய திசைகளில் பிரிந்துசென்ற இலைகள்...!!
எல்லாம் உதிர்ந்துவிட்ட தனிமரத்தில்
காயந்த கிளைகளும், வளர்ந்தொங்கிய நடுப்பகுதியும் ஏனோ நிற்கிறது வலுவில்லாமல் ஆனால் துணிவோடு.
இறந்துவிட்ட பல பகுதிகளில் மரத்தின் மனம் மட்டும் உயிர்கொண்டு இன்னும் நீள்கிறது இந்த கவிதை போலவே காரணமில்லாமல்.-
அசையாமல்
நின்றிருந்தேன்
தனிமரமாய் ?
கிளைகள்
முளைத்த போது
அன்பாய்
தலை சாய்கிறேன் ?
சிலரின்
இறுக்கத்திற்காக !-
இமைகள் மூடினால்
இதயம் கேட்கிறாய்
இதயம் திறந்தால்
உயிரை கேட்கிறாய்
உணர்வை தொலைத்து
உரிமை விடுத்து
தனியாய் போனேன்
தனிமரமானேனடி
என் காதல் ராட்சஷி..💞-
இருப்பிடத்திற்க்காக ,
திசை அறியாத
பறவையும் ,நீயும்
ஒன்று தான் ?
தனி மரமாக
நான் இருப்பதை
மறந்து !-
மொழியில்லா பரிமாற்றம்
உன்விழி சேர்ந்திட
அழைக்குத்தடி..
இணைசேர வழியின்றி
என் இதயமும் தவிக்குதடி..
தனிமையெனும் பூங்காற்றால்
உன் நினைவுபுயல் வீசுதடி..
நிலைகொள்ள மனமின்றி
மனம் தடுமாறி தொலைக்குதடி..
கரம்கோர்க்க துணையுமின்றி
காதலெனும் காயம்பட்டு
கால்களின்றி
தனிமரமாய் நிற்கிறேனடி..
என் காதல் ராட்சஷி...!-
என்னை
தனிமரம் ஆக்கி
அணைத்துக் கொள்ள
நீ நினைத்தால்
முதலில்
நீ தனிமரமாகிடு!
ஆணுக்கு ஒரு நீதி!
பெண்ணுக்கு ஒரு நீதி!
என்றெல்லாம் இல்லை
அனைவருக்கும்
ஒரே நீதி!-
உன் கரம் பிடித்த எனது கரம் வேறெவரையும் தீண்டாது...
உன் இதழ் ருசித்த என் இதழ் வேறு சுவையை விரும்பாது...
நீ தலை சாய்த்த இம்மார்பு வேறெவரையும் நாடாது...
நீ உணர்ந்த என் வியர்வை மணம் கூட வேறொருவரின் நாசிக்கு செல்லாது....
காரணம் நீ விலகிச் சென்றதால் அல்ல....
கற்பென்பது ஆணுக்கும் உண்டு...
அவன் காதலுக்கும் உண்டு...
இனி மரணம் வரை இவன் தனி மரமே....
-