QUOTES ON #சுயமரியாதை

#சுயமரியாதை quotes

Trending | Latest
16 MAY 2019 AT 9:54

தவறுக்கு
தலை வணங்காது
தன்னிலை மாறாது
தன் சுயம் காத்து
தனித்து நிற்பது...

-


14 MAY 2020 AT 6:59

சண்டைக்கு பின்
கோபங்களையும்
பிடிவாதங்களையும்
விட்டு விட்டு முதலில்
நாமே பேசிட
துவங்குவது...
பேரன்பின்
வெளிப்பாடேயன்றி
அது சுயமரியாதையின்
தோல்வியல்ல...!!!

-


28 JUL 2020 AT 16:54

சுயத்தை காக்க
போராடும்...
அவளுக்கு பெயர்
திமிர் பிடித்தவள்...!

-


5 OCT 2018 AT 13:28

சுயமரியாதை இருக்குமிடத்தில் மட்டுமே
சுயவொழுக்கம் பிறக்கிறது.
நீ என்னைக் கவனி.
நீ என்னைக் கவனிக்காதே.
எனக்கதுவொரு பொருட்டல்ல.
நான் செய்வதை ஒழுங்காய்ச் செய்வேன்.
நீயென்னைக் குறை சொல்லும்
வாய்ப்பைத் தேடி அலுத்துப்போ.
இதுவே சுயமரியாதை.
சுயமரியாதை எங்கோ,
சுயவொழுக்கம் அங்கே!

-ஜெயந்தி முருகன்.

-


14 AUG 2022 AT 22:10

சுட்டிக் காட்டப்படும்
தவறுகள்
திருத்தப்படாமல்
கண்டு கொள்ளப்படாமல்
செல்லும் போது
அடுத்த தவறை
நாம் கண்டும் காணாமல்
கடப்பது
நமக்கு நாமே தரும் மரியாதை.

-


16 MAY 2019 AT 13:19

நம் மீது நமக்கிருக்கும்
நன் மதிப்பு,
நாமே நமக்கு தரும்
நற் சான்றிதழ்...

-


16 MAY 2019 AT 10:01

சுயத்தை இழக்காமல்
பிறருக்கு தலை வணங்காமல்
எந்நிலை வரினும்
தன்னிலை மாறாமல் இருப்பது

-


16 MAY 2019 AT 10:12

வாழ்வில் உன்னை பெற்றவர்களை
தவிர யாரிடமும் மண்டியிடாதே....
சுயமரியாதை தொலைத்த
வாழ்க்கை வீண்
சுயத்தை இழந்தவன் உயிரற்ற
உடலைப் போன்றவன்!!

-



மக்கள் மரங்களுக்கு சமமானவர்கள், காய்ந்த சருகுகளை போடலாம் தற்போது, ஒரு நாள் அந்த மரங்களில் பூக்கள் பூத்தே தீரும் உன் மீது தூவலாம், இரண்டிற்குமே அமைதியாக இரு உலகமே உன்னை போற்றலாம்..

-


16 MAY 2019 AT 11:10

பிறர் தவறுகளை

சுட்டிகாட்டிய பின்

எழும் நிகழ்வுகளில்

பாசத்துக்கு பணியாமல்

நேர்மை ஒழுக்கம்

வழி நின்று செயல்களை

நிகழ்த்துவதே சுயமரியாதை...

-