-
இதுவும் கடந்து போகும்...
எல்லாம் அவன் செயல்...
😈😈😈 குட்டி சாத்தான்...
உறங்கிடும்
உன்
கட்டை விரல்
உரசும்
என்
இதழதின்
இன்பதின்
காலத்தை
மெல்ல
கடத்துகிறேன்
வருடல் வழி
வசியம்
செய்கிறேன்...-
நுதல் நுனி
இதழ் பணி
இறுக்கங்கள்
வலுப்பெற
விரல் கொடி
சுழற்சியில்
விழி வெளிச்சங்கள்
இமைப்பறவை
சிறகதை
அணைக்கிறதே
புவியதன்
உணர்ச்சி
இழக்கிறதே...-
இதயமது
இறந்து
ஓசையது
ஒடுங்கியே
போனது,
நீ பறித்து
ஏந்தியவையில்
மிஞ்சியது
உன் நினைவுகள்
மட்டுமே...-