பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கிறேன்..
புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன்..
உணவு சமைத்துக் கொண்டிருக்கிறேன்..
செடிகளுக்கு நீருற்றிக் கொண்டிருக்கிறேன்..
வீட்டைச் சுத்தம் செய்துக் கொண்டிருக்கிறேன்..
வேலைகள் அத்தனையும்
மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது
அனேகா..!
எதிலுமே உனது சாரம் இல்லை..
உனது சாரமற்ற எதுவும் எனதாக இல்லை..!
-ஜெயந்தி முருகன்-
தமிழ் எழுத்துக்களுக்கு : தூரிகைகிறுக்கல்கள்
காதல் ஒரு மாயை...!
இரசித்தலின் சுகம் வேண்டும் என்கிறேன்..
சலிப்பைப் பரிசாகத் தந்து செல்கிறது..
இருத்தலின் இன்பம் வேண்டும் என்கிறேன்..
நாளெல்லாம் விலக்கி வைத்து விளையாடுகிறது..
அணைத்தலின் இதம் வேண்டும் என்கிறேன்..
அரவமற்ற அறையில் நிறுத்திச் சிரிக்கிறது..
புன்னகைகளின் சங்கீதம் வேண்டும் என்கிறேன்..
இறுக்கத்தை நெஞ்சில் கட்டி கண் சிமிட்டுகிறது..
காவியங்களில் கவிபாடும் காதல் வேண்டாம்..
கைகளைப் பற்றியபடி உடனிருக்கும்
காதல் வேண்டும் என்கிறேன்..
தூரத்தில் மறையும் வானவில்லை
கண்ணில் காட்டித் தொலைக்கிறது..
காதல் ஒரு மாயை...!
-ஜெயந்தி முருகன்-
You don't like me because
you don't know me.
I like you because
I don't know you!-
விடியலா? அஸ்தமனமா?
கண்களை மூடிக்கொண்டால்,
விடியலும் இருட்டுதான்..
புலன்களைத் திறந்துவைத்தால்,
காரிருளும் கவிதைதான்..
சொல்லுங்கள்..
இது உங்கள்
விடியலா? அஸ்தமனமா?
-ஜெயந்தி முருகன்-
காற்றுக்கு
இதமான சில்லிப்பு..
கண்ணீருக்குதான்
ஆயிரம் காரணிகள்..!
-ஜெயந்தி முருகன்-
Reciprocation cannot be begged because
it can never equalize the actual effort that's been
put in wholeheartedly.-
What are you most afraid of?
Death?
No.
The suffocation that makes me
desperate to live.-
உடல் உறிஞ்சாதவரை,
உண்பவையெல்லாம்
கழிவுதான்..
மனம் வருந்தாதவரை,
மன்னிப்புகளெல்லாம்
கடமைதான்..
-ஜெயந்தி முருகன்-
Stop taking advantage!!!
Someone is not judging you
doesn't mean they are
comfortable with everything
you talk and share.
It means they are trying to
understand you.-