முதல் முறையாய் கண்மணிக்கு
ஒரு காபி கவிதை.
காபி குடித்தே உயிர் வாழும்
கண்மணி அவர்களுக்கு
இந்த கவிதை சமர்ப்பணம்.
கீழே தொடரவும்.
-காஞ்சி வழிப்போக்கன்.🙊-
****************
காலைப் பொழுதின்
உத்வேகமும்
காபியின் வாசமும்
கலந்த கலவையாக
சுவையாக இருக்கும்-
தனக்கான நொடிகளை புதுப்பித்தும்
தன்னை தானே ஆசுவாசப்படுத்தியும்
தனக்கு பிடித்த தனிமையில் உன்னை
ரசித்து ருசிக்க நிரம்பவே பிடிக்கும்..❤️-
காபியோடு
கலந்த கவிதை
இனிமையை தக்க
வைக்கும் அமுது
தனிமையை தவிக்க
செய்யும் அழகு..❤️-
சீனி வேண்டுமா என்றேன்
வேண்டாம் என்றாய்
ஆடை எடுக்கவா என்றேன்
வேண்டாம் என்றாய்
ஆறாமல் குடி என்றேன்
ஆறட்டும் என்றாய்
எப்போழுது ருசிப்பாய் என்றேன்
அருகில் வா என்கிறான்...-
காலை எழுவதும் அவன் கண்களில்
மாலை முடிவதும் அவன் இதழ்களில்
அவன் கதகதப்பான அணைப்பில்
கட்டில் மயக்கமதை மறந்திடுவேன்!!!
அவன் விரல் தொட்டு நகர்கையில்
விரதங்கள் அத்தனையும் முடித்திடுவேன்!!
குளிர்கால போதையின் தேவை அவன்!!
காதல் எல்லாம் இல்லைங்க....???
காலையில குடிக்கிற காபி பத்தி
தான் பேசிட்டு இருந்தேன்..!!😜
Nandhini Murugan
-