யாரென்று பார்த்தாரில்லை
யாவரென்று யானும் அறிந்தோறில்லை
யேனோ நானோ இருளை அணைக்கவில்லை
யன்னவன் வரும்வோசை பூத்திருக்க
நிலவோளியோ அசைந்து நின் நிழலை மீட்டெடுக்கிறாள்....
யவனின் விலாசம் யவள்யறிய மனகரையில்
தள்ளாடி நிற்கும் தோனியாய் ....
-
மௌனித்த கணங்கள்
எல்லாமே...
என்னுள்ளே மரணத்தை
கொண்டாடி செல்லுதே ...
கொடியவனா எனறெற்க்காத
அவனே...
அவன் கதை நிதமும் நாழி
கடத்துமே...
ஒத்தையடியில் ஒருத்தி உசிரை
கடத்தியபடி....
நீ கதைக்கும் நகைப்பை தேடியவள்
நாடியின் நொடியில் அவள்....-
துரத்திப் பார்க்காதவரை
ஆசை வெறும் ஆசையே...
இழுத்துப் பிடிக்காதவரை
உருவமும் வெறும் அருவமே...
தொலை தேடித்தேடித் தொலை
கண்டு விடாதே உன்னை...
சலிக்காமல் தொலைந்து விடு
கண்டெடுக்க ஒன்றைப் பெற்றுவிடு...
பெரும் சாபமெது வாழப்பழகுவது
அதுவே இவ்வாழ்வின் பேரின்பம்...!!!-
தனிமை ஒரு மின்னஞ்சல்
நெஞ்சினிடையில் தந்தியடித்து
நினைவென்னும் ஓசையை
எழுப்பி ராகம் பாகமாய் பிரித்து
தாளமிட்டு செல்லும் இனமறியாத கானங்கள்....
-
மனம் ஒரு போதையை
தேடியே என்றும் அலைகிறது....
ஒன்றை தூக்கி வைத்து
கொண்டாட துடிக்கிறது...
அதுவே முதல தள்ளி
வேடிக்கை பார்க்குமென்று அறியாமல்...
இருக்கும் சொற்பவாழ்வை இனிதே
வாழ்வதற்கு தான் எத்தனை போராட்டம்...
பாகுபாடுகள் வேண்டாம்
பகுத்தறிவு கொஞ்சம் போதும்
நான் என்பவனுக்கே இவை....-
யாரோ சொன்னார்கள்
யாவரோ கேட்டார்கள்
யாதும் இனிதும் கிடையாது
யாவதும் கசந்தும் நகராது
யாரென்று பாராமல் மாறாமல்
முகமெது காணமல் அகமெதுவென
கண்டு துயில் கொள் கண்ணே....-
ஒரே கோட்டில் பயணிக்கிறோம்....
இரவை பகல் என்கிறாள்
நானோ பகலை இருள் என்கிறேன்...
-