-
நலமா என்ற கேள்விக்கு
நலமென அனைவரும் சொல்ல
ஓயாமல் பணிபுரியும்
மருத்துவத்துறை நண்பர்களுக்கு
வணக்கத்துடன்
அன்பான வாழ்த்துக்கள் 💐-
பிறர் அறியாமல்
கண்காணிப்பவர்
பெரும்பாலும்
உணர்வதில்லை
நம் அனைவரையும்
மேல் இருப்பவன்
கண்காணிப்பதை....-
தவறி விழுந்து
உடைந்த கடவுள்
படத்திற்காக
மகனை திட்டினான்
அன்னையை
ஆதரவற்ற
இல்லத்தில்
விட்டுவிட்டு வீடு
திரும்பிய அவன்-
நம்பிக்கையுண்டு
கடவுள் மேல்
எப்போதும்!
நம்பிக்கையில்லை
மனிதன் மேல்
எப்போதும்!-
நான் கோயில்
கருவறையில் இல்லை...
நீ கொடுக்கும்
காணிக்கையில் இல்லை...
உன் கருணையில்
நான் உள்ளேன்...
-கடவுள்
-க.கொ.மணிவேல்...🖋-
கடவுள்
இருக்கிறாரா இல்லையா
அப்படிங்கறது
எல்லாம் வேற பிரச்சனை
நாம வீட்டுக்கு போனா
சாப்பிடுறியா?
சாப்டியா?
என்று
எந்த ஜீவன் கேக்குதோ
அந்த ஜீவனில் தான்
கடவுள் ஒளிந்து உள்ளார்-
நல்லவேளை அனைத்து ஜீவராசிகளையும்
படைத்த பின் கடவுள்,
தாமதமாகவே மனிதனை படைத்தார்.....
இல்லையெனில் உலகம்
என்றோ அழிந்திருக்கும்..-