❤️❤️❤️❤️
-
Early 2k kid 🦋
தமிழின் மீது...
அவ்வளவு போதை ❤️...
மனதில் உள்ளதை ,கற்பனையில் உலவுவதை... read more
இன்பமோ, துன்பமோ
தனிமையோ,தாகமோ
நமக்கான ஆறுதல் எப்பொழுதும்
"☕"மட்டுமே!-
என்னவன் இல்லாதவனே...
எப்பொழுதும்
உன்னை வைத்தே
கவிகளை வடிப்பேன்...
உன்னையே
எண்ணத்தில் நிறுத்தி,
இரசனையில் லயித்து,
தங்கு தடையின்றி
சொற்களை கோர்த்து விடுவேன்...
இப்பொழுதோ...
நீ வேறொருவளின் என்னவன் ஆகிவிட்டதால்...
உன்னையும் எண்ணத்தில்
நிறுத்த இயலாமல்,
வேறு ஒருவரையும் எண்ணத்தில்
இருத்த முடியாமல்,
இருதலை கொள்ளியாய்..
இருக்கிறேனே...
-
'அபிராமி' என்ற பிம்பத்தை
பிரித்து பார்த்தால்...
அதில் பல துண்டுகள்
ஆசிரியர்கள்✨ ..!
-
காதலே...
உன்னுடன் ஒரு யுகம் வாழ
யோசித்தேன்...!
எப்படியோ மூளையைக் கூட
ஏமாற்றி விடுவேன்...
அவ்வப்பொழுது
உன் வருகைக்கு ஏங்கும்
என்னிதயத்திடம் எப்படி சொல்லுவது?
உனக்கு வேறு வாழ்க்கை அமைந்துவிட்டதென்று..💔
-
அவன் காட்சிக்காக
கால்கடுக்க நின்று
சாமி தரிசனம் செய்தேன்..!
நீண்ட கோரிக்கைக்குப் பிறகு
இறைவன் என் வேண்டுதலை
ஏற்றுக்கொண்டான்...
நாளை
என்னவனைக் காண செல்கிறேன்..
அவன் காட்சியளிக்க போகிறான்...
மணமேடையில்...
அவனின் அவனவளோடு!✨
-
நீ
நான்
நாம்
என்று யோசித்த உலகில்...
நீ
அவள்
நீங்கள்
என்று ஆகி போனது நிஜத்தில்..!-
ஏதோ..!கவிதை கேட்கிறாய் என்னிடம் ?
களியாட்டம் புரிந்திடும்
உன் காந்த விழிகளை வைத்து
நான் கவிதை எழுதுகையில்....
தடுமாறி இடறிடாதா ?
என் இதயம் !❤️
நீ பேசும் மொழிகளில்
சிணுங்கும் இசையில்
காதல் தான் கொள்ளாதா?
சங்கீத ஸ்வரங்கள் ❤️!
பண்பட பேசும் உன் குணமும்
குறையாத அன்பும்,
அளவில்லா அழகும்,
நாட்கள் கூட கூட
வளர்பிறை போல வளர்கிறதே..
அதைக் கண்டு
வியக்கிறேன் அன்பே....
அழகிய உறவே...!
கவிதை கேட்கிறாய் என்னிடம் ?
உன் இதழ் உதிர்க்கும்
மொழிகளே....
ஒரு கவிதைதானே ! ❤️🥰
கவியாளனே...❤️-
கடைசி வரை போராடு!
போராட்டத்தின்
கடைசிநொடிகளில் கூட
ஆட்டம் மாறாலாம்!
பூக்கள் கொட்டலாம்..!
-