இயற்கையின் வாத்தியங்களோடு
காற்றோடு கைகோர்த்து
தாளத்துடன் ஆடுகிறாள்...
-மழை..--
அலைகளின்
தீண்டல்கள்
தொட்டு தொட்டு
மணல் உரசும்
காட்சியில் வெட்கம் பூசி
சிலிர்த்ததோ வானம்...
பரவும் காதலில் தான்
இயற்கையும் அழகானதோ!-
இயற்கை #10
வெட்டினாலும்
குழி பறித்தாலும்
காயப்படுத்தினாலும்
பொருத்தருளும்
பூமித் தாயை போல்
என் பிழைகளை
பொருத்தருள்
கண்மணி🙏🙏🙏
-
வான் சிந்தச் சிந்தச்
சேமிக்கிறது பூமி
பனித் தூறல் தொட்டு
சிலிர்த்து
அசைந்திடும் புற்கள்
ஈர முத்தம் தொடரப்
போர்த்திக் கொள்ளுதே
இயற்கை
குளிர் கொஞ்சம் நீங்கவே
படர்ந்து
விரிகிறான் சூரியன்!-
இயற்கையை கொண்டாடும்
கவிஞர்...
வரிகளை ரசிக்க செய்வதுடன்
அதனுள்ளே வசிக்க செய்பவர்...
இவரது வரிகளை படித்து
முடித்தவுடன் தோன்றுகிறது
ஒரு முழுமையும் நிம்மதியும்...
ஒரு தாயின் தாலாட்டை போல்
தான் பிரதிபலிக்கிறது
எனக்கு இவரது வரிகள்...!-
மதிலில் பாதி மறைந்து
ஆடம்பரமாய் அலங்கரித்த
மரங்கள் அசைகிறது.
காடுகளை அழித்து கட்டிய
தொழிற்சாலை முன்பு . . . ?!-
இயற்கை #9
வானம் காட்டும் வர்ண ஜாலத்தை
வரைந்த ஒவியனை ஒரு முறை கண்டு சொல்ல வேண்டும்...
எங்கள் தலைவர்களின் வாய் ஜாலம் முன் உன் ஜாலம் செல்லாது என்று 😏-
அத்தனையும் அழகழகு
பறவைகளை பார்க்கும்
பூக்களும்
பூக்களை தொலைநோக்கும்
வானவில்லும்
வானவில்லை தொடரும்
கருமேகங்களும்
கருமேகங்களில் புகுந்து கொள்ளும்
பறவைகளுமென
அருமையான தொடரோட்டம் இது
எத்தனை எளிமை,மனதிற்கு இனிமை-