QUOTES ON #ஆணவம்

#ஆணவம் quotes

Trending | Latest
12 MAY 2021 AT 15:51

தான் என்ற ஆணவம் உன்னை
தாழ்த்துமே தவிர உயர்த்தாது!

-



காதோரங்களில்

சுருண்டு விழும்

முடியின் ரகசியங்களை

உடைத்தெறியும் அவளின்

கைகளுக்கு ஆணவம்

பலமடங்கு அதிகம் !

-


11 MAY 2022 AT 16:54

அவளுக்கு உலகமே
நீதான் என்று
பெருமை கொள்கிறாய்
ஆனால்
அவள் இல்லாத
உலகில்
நீயும் ஒரு
துரும்புதான்
என்று ஆணவத்தில்
மறந்து விடுகிறாய்........

-


10 AUG 2019 AT 11:37

அவன்..
விழிக்கோளங்களின்..
அரை நொடி
விரிதலில்..
ஆணவப்பட்டு
போகிறது..
என் அழகு..

-


27 AUG 2019 AT 20:13

அத்தான்னு சொல்லாதடீ
அடிச்சிருவேன் பாத்துக்கனு
ஆணவத்தில
நீ மறச்ச
நாணத்திலதான்
நான் விழுந்தேனடா
ஆணழகா!

-


5 NOV 2020 AT 8:55

தான் என்ற ஆணவம் கொண்டவன்
சுயநலத்தில் முன்னேறுவானே தவிர
சுயசரிதையில் அல்ல!

-



உன் வாசிப்பில்

என் கடிதங்கள்

புத்துயிர் பெற்றதாய்

ஒரு ஆணவம் !

-


5 JUL 2019 AT 12:09

கற்றுக்கொள்ள தயாராக
இருப்பவர்களால் தான்
ஆசிரியராக இருக்கமுடியும்.
கற்றது கையளவு
கல்லாதது உலகளவு
என்பதை நினைவில்
வைத்துக்கொண்டால்
ஆணவம் என்பதேது!

-


16 JAN 2020 AT 14:55

ஒரு நொடி யோசிக்காமல் உதிர்க்கும்
வார்த்தைகள் வாழ் நாள் முழுவதும்
யோசிக்க வைக்கும்

ஆணவம் கொண்டவரெல்லாம்
மண்ணாகி போன பூமியிது
என்பது நினைவில் கொள்வது நலம்!

-


10 JUL 2019 AT 22:46

நான் நானாக இருப்பதால்
நிந்திக்கும் கோழைகளே;
மறவாதீர்கள்.
நீங்கள் கொண்டாடும் போதும்,
நான் நானாகவே
இருந்தேன்.

-