அக்கினிப்புத்திரர்கள்
ஆட்சி செய்த ஈழ வாயிலில்
விக்கித்து நிற்கிறது
விலைபோன தமிழ் அரசியல்-
மூளை இல்லாதவனும், பாரில் இல்லாதவனும்
ஆள்கின்ற நம் நாட்டினிலே,
அணுகுண்டு வெடித்தால், அனுதாபம் தேடும்
அறை முட்டாள் மானுடரே !
கோ செய்யும் தவறை, கோபங்கள் கொண்டு
வலைப்பக்கம் நீ பகிர்ந்தால்,
கோவணம் கட்டியே, கோட்டை ஆளும்
ஏழைத்தாய் மகன் நானென்பான்.
ஆட்சி மாற்றங்கள், கட்சி மாறல்கள்
நம் அரசியல் நிலைப்பாடு.
ஐந்தாண்டு வாந்தால், ஐம்பது வாங்கி
பையில் வைப்பது திருவோடு.-
மக்கள் பிரச்சனைகளை விட
மக்கள் செய்யும் தவறுகளை
மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்
அதுவே இன்றைய காலத்துக்கு தேவையான அரசியல்.
-
குடிசைக் குளியலறையை
மொட்டைமாடி பார்வையிலிருந்து
மறைத்துக் கொண்டிருக்கின்றன,
ரேசன் சேலைகளும்
அரசியல் பதாகைகளும்..-
அரசியல்வாதிகள் ஞானம் பெற,
அரசியல் ஒன்றும் போதி மரம் அல்ல...
For politicians to change,
politics is not a bhodhi tree...-
முன்பொரு நாள்
ஊர்நடுவில்
அக்கொடிக்கம்பம்
தனித்திருந்தது..
நாளாக நாளாக
வண்ண வண்ணக்
கொடிகளுடன்
மேலும் பல
கம்பங்கள்
ஒற்றுமையாய்
இடத்தைப்
பகிர்ந்துகொண்டன..
சாதிக்கொரு சாயம்
பூசிக்கொண்ட மக்கள்
இன்றும் தனித்தே
கிடக்கின்றனர் !-
வர மகாலட்சுமியை (பணம்) வேண்டாம் என்று சொல்லக்கூடாது என்று நீங்கதான் சொன்னீங்க... இப்ப என்னடான்னா ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்று சொல்றீங்க... நான் என்னதான் பண்றது..
இப்படி டிசைன் டிசைன்னா குழப்பறாங்களே.. 🤯🤯😵😵-