அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தம் மட்டுமல்ல
அன்பும் கூட
நஞ்சு தான் சிலருக்கு..
அளவுக்கு மீறிய அன்பை
யாரிடமும் காட்டாதீர்கள்
ஒரு கட்டத்தில் அது
திகட்டிப் போய்விடும்!-
நிறமில்லா நீளமாய் அலைந்து
திரியும் அலைவரிசைகள்
கோபுரத்தில் குடிகொண்டு
கட்டணத்துடன் இன்றைய
காலத்தில் அன்பென்யது . . .?
-
அன்பையும் அளவோடு
நிறுத்திக் கொள்
ஏனெனில் ஒரு வேளை
ஏமாற்றம் ஏற்பட்டால்
அதில் இருந்து
மீண்டுவர பலகாலம்
தேவைப்படும்-
அன்பால் நிறைந்த இதயம் அதிக
வலிகளை தாங்க முடியாமல்
போய்விடுகிறது..
அன்பானவர்கள் தரும் போது..!!-
மனதில் உனக்கென
கட்டிய கோட்டையில்
பல கனவுகள் சுமந்த
என்னை தூக்கி எறிந்து
அத்தனையும் அர்த்தமற்ற
உன் புரியாத பிரிவுகளில்
உடைத்து விட்டாயே!
என் அன்பை புறக்கணித்து
உன் ஒற்றை சொல்லால்
காதலை மறுத்தக்கணத்தில்
இதயம் நொறுங்கி
உன் அன்பிற்காக ஏங்கியே
மனம் ஊசலாடி கொண்டிருக்க
என் அன்பை விலக்கிக்கொள்ள
மனமில்லாமல் தவிக்கிறேன்!!!
-
காரணம் இல்லாமல்
வெறுப்பவர் இடம்
காரணம் கேட்காமல்
இருப்பதே நல்லது..
ஏனெனில் காரணங்கள்
உருவாக்கப் படலாம்..!!-
அதிகமாய் பேசுவது
அன்பின் தொடக்கம்
கோபமாய் பேசுவது
உரிமையின் தொடக்கம்
மௌனமாய் இருப்பது
பிரிவின் தொடக்கம்...-
அன்பு...
ரோஜா பூக்களை போல ...ரொம்ப நெருங்கினால் குத்தி விடும்....-