எனது கடமையை
சரியாக 👍👍
செய்துவிட்டேன்..
வரப்போறவன்
என்ன செய்யக்
காத்திருக்கானோ...
🤷🏻♂️🤷🏻♂️-
நம்முடைய
ஒவ்வொரு வாக்கும்
நமது ஐந்தாண்டுகளின்
தலையெழுத்தை
நிர்ணயிக்கும்
வல்லமை படைத்தது
ஆதலால் வாக்குகளை
வீணாக்காதீர்கள்
ஓட்டு போடும் முன்பு
நன்றாக சிந்தித்து
வாக்களியுங்கள்
யார் வந்தால்
நம் நாடு செழிக்கும்
என்பதை யோசித்து
உங்கள் வாக்குகளை
செலுத்துங்கள்
சிந்தித்து செயல்படும்
தருணமிது
நல்லவர்களுக்கு
வாக்குகளை செலுத்தி
நாட்டை வளமாக்குவோம் 🙏🙏...
-
கலங்கமின்றி வாக்களிப்பது கருவில்
குழந்தையை சுமக்கும் அளவிற்கு
புனிதமானது !-
உன் இனம் கருதி நீ இட்ட
வாக்கிற்கு இனாமாய் கிடைத்தது
இரண்டாயிரம் மட்டுமே !-
பதினெட்டு கடந்தும் பிறர் சொல்
கேட்டு வாக்களிக்கும் பாலகனே !
பாழாவது நீயே !-
காசுக்காக வாக்களிப்பதும்
கல்லறைக்கு முன்பதிவு செய்வதும்
ஒன்று தான் !-
சீர்திருத்தம் வேண்டுமெனில் ஆயிரம்
முறை சிந்தித்து வாக்களி , அதற்கு
சன்மானமாக ஆயிரம் பெற்று
வாக்களிக்காதே !-
எனக்கான உரிமை
இங்கே சுயநலமில்லை
தனிப்பட்ட விருப்பமும்
நியாயமான விடையும்
தேடிய ஓர் நாள் பயணம்-