ரம்ஜான் 👇
-
நான் யாரையும் அளவு கடந்து நேசிப்பது அ... read more
என் விழிகள் சொல்லும் மொழிகள்
உனக்கு புரிவதில்லையா?
இல்லை புரிந்தும் புரியாமால் நடித்து கொண்டு இருக்கிறாயா...
என் உணர்வு புரியவில்லையா?
உன் மனதில் எண்ணம் தான் என்ன...
நான் பேசும் வார்த்தைகள்
உன் செவிகளில் கேட்கிறதா?
உன் செவி திறப்பாயா...
என் மொழி உனக்கு
கேட்பதுமில்லையா?
என் விழிகள்
சொல்வதை புரிந்துகொள்வாயா...
என் பார்வையின்
அர்த்தங்களையும்,
என் விழிகளால்
சொல்லும் அன்பை...
உன் இதழ்களால் நீயும் ஒருமுறை சொல்லி விட வேண்டும் என்பதே என் தினசரி பிரார்த்தனை அதற்காகவே காத்திருக்கிறேன் என் வாழ்வில் ......-
நீயும் நானும் கைகோர்த்து நடந்தால் அதை காதல் என்று சொல்லும் இந்த சமுதாயத்திற்கு என்ன தெரியும் நீயும் நானும் நட்பு என்னும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் என்று....
-
துயில் தேடி துவள்கையில்
நித்திரையின் மாத்திரையாய்
துன்பத்திலும் துணையாய்
இன்பத்தின் இரட்டிப்பாய்
எனது
கண்ணீரில் அமைதியாய்
புன்னகையில் பூரிப்பாய்
இவ்வுலகில்
என்னை புரிந்துகொண்ட உணர்வே
என் இசை.....
-
பழையன கழிதலும்
புதியன புகுதலும் என
உதயமாகும்
தலைத்திருநாளாம்,
பொல்லாத குணத்தை
எல்லாம் தீயிலிட்டு
கதிரவனின் கருணைக்கு
நன்றி எனக் கூறும் நாளாம்!...
உழவனுக்கு சிறப்பை
கொடுக்கும் உயர்ந்த திருநாளாம்,
மிரட்டிவரும் காளைகளை
விரட்டி அடிக்கும் வீர நாளாம்!....
அடிக்கரும்பாய் இனிக்கும்
வாழ்வை சுவைக்கும் நாளாம்,
பழைய எண்ணங்களை அவிழ்த்து
புதிய சிந்தனைகளைப்
புகுத்தும் நாளாம்!.....
வாசலில் கோலமிட்டு
கரும்புப் பந்தலிட்டு
புதுப்பானையில் பொங்கலிட்டு,
பொங்க கொண்டாடும் நாள் தான்
நம் பொங்கல் திருநாள் !......
தமிழர் திருநாள் இது
தமிழர்களின் வாழ்வை
பெருமைபடுத்தும் நாள்
அதுவே நம் "தைத்திருநாள் "!.....-
பல ஆறாத வலிகளும்
நினைவில் வந்திருக்கும்
மறக்க முடியாத தருணங்களும் உள்ளத்தில் உதயமாகிருக்கும்
பல இன்னல்களும் மனதை
அழுத்தி இருக்கும்
தேவையற்ற குழப்பங்களும்
சூழ்ந்து இருக்கும்
எதிர்பார்பின் ஏமாற்றத்தை
நினைவுப்படுத்தி இருக்கும்
பொய்யான உறவால்
வெறுமை தோன்றி இருக்கும்
இத்தனை நடந்தும்
"இதுவும் கடந்து போகும்"
என்ற நம்பிக்கையில்
தனித்து இருந்த நேரத்தையும்
கடந்து இருப்பேன்
என் வாழ்வில்!.........
-
ஆண் என்ற கர்வமின்றி
என்னை அழகுப்படுத்த
என் முன் தாழ்ந்த
உன் காதலை கண்டு
இந்த இயற்கையும்
தலைவணங்க,
நானும் உனதன்பில்
வீழ்ந்தேனே என் ராட்சனே!......-
வாழ்க்கையில் சந்தோஷம் எதுவாயினும் அனைத்திற்கும்
முற்றுபுள்ளியாய்
செக் வைத்து விடுகிறது,
வெறும் காகிதமா?
இல்லை................
விலைமதிப்புக்க காகிதமா?
என கருதும்
இந்த "பணம்"!..........-