படர்ந்த மேனியில்
தொடர்ந்த ஒத்தடம்
தழல் விட்டு பதமாய்..
சுடர் தொட இதமாய்..
மறந்ததோ
அடர்ந்ததோ இருள்
நிறைந்ததோ!
பின் மறைந்ததோ
காதலன் அவன்
காட்சியும்!
-
மலர்களுக்கு முத்தம் தூவி!
நாணத்தில் சிவந்து கொண்டான்!
மைந்தனவன் மயக்கத்தில்!-
செதுக்கப்படாத சிலையாய்!
ஓவியங்கள் தோற்றுப்போகும்
ஒய்யார தோற்றத்தில்!
ஒப்பனைகள் ஏதுமின்றி
இள மங்கைக்கு போட்டியாய்!
மேக தோரணத்தில் வலம் வரும்
கதிர் உந்தன் பேரழகை
எப்படித்தான் வடித்துரைப்பேன்!
போதாதே என் வரிகள்!-
மேக மஞ்சத்தில்
மோகத் தோரணம்
மயக்கத்தில் மடிந்ததோ
மஞ்சள் முகமவள்!
செஞ்சேலை கலைந்ததோ
செந்தழல் படருதே
செந்நிறக் குங்குமம்
செவ்வே சிதறுதே!
வாஞ்சை கொள்ள
வான்வெளி - இன்பத்தில் திகழுதே
வண்ணங்கள் அப்பிக்கொண்டு
வசீகரம் செய்யுதே!
ஒப்பனைகள் பூசியவள்
ஒய்யாரமாய் காட்சி தர
ஒளிமங்கும் இரவதை
ஒன்னுசேரப் போர்த்துதே!
"காதல் கொஞ்சும் மாலையிதோ"
-✍️ ֆumaihÃ-
மங்கிய மஞ்சள் கலந்த
பல வர்ணங்களில் ஒளி
தங்கி தாரை வார்த்து
ததும்பிய வெப்பத்தில்
சிதறிய துளி-
பகல் முழுதும் அவள் வரவை
எதிர்பார்த்து எதிர்பார்த்து
மாலையில் ஏமாந்து
தன்இல்லம் திரும்புகிறான்
சூரியன் !-
தென்றலின் தழுவலில்
மனம் மயங்கிய
நேரம்
பறவைகள்
கூட்டைத்தேடி
கூச்சலிட
மனதும்
கனத்துப் போனதே
மரங்களின்
இற(ழ)ப்பை
எண்ணி...!!!-
உன்னை நேசித்த நாள் முதல் கோர்க்கப்பட்ட பூக்கள் திருமண மாலையாக உன் கழுத்தில் ஊஞ்சலாட காத்திருக்கிறது.
-