-
பகுத்தறியும் அறிவுதனை
மானிடர்க்கு தந்த இறை
அனைத்தையும் நேசிக்க
மனதிற்கு தந்த நிறை
வாழும் நாள் சிறிதென்று
பகையில்லா வாழென்று
தன்னைப் போல் சகலத்தையும்
சரிசமமாய் நினையென்று
அந்நிலைக்கோர் பெயர் தந்தான்
மனித நேயமென்று-
ஒருவருக்கு முயலாமை என்ற நிலையில்.. நாம் ஆமை போல் இல்லாமல் முயல் போல் விரைந்து முன் வந்து உதவுவது....
-
என் தந்தை வயதொத்த ஒருவர்
வாகன நிறுத்துமிடத்தில் இருந்து வண்டியை வெளியெடுக்க நான் விழைகையில் விரைந்து வந்து கதவை திறக்க எத்தனித்தார்.என் மனம் பதற ஐயா, நானே செய்கிறேன் என்று கூறி மிகச் சிறு தொகை கொடுக்கையில்"வேண்டாமா.. இங்கு தரும் சம்பளத்திற்கே உரிய உழைப்பை கொடுக்கிறேனா,தெரியல..உழைக்காத காசு உடம்புல ஒட்டாதுமா,நீ படிச்சு வேலைக்கு போனப்புறம் அப்பாவ பாத்துக்குவேனு உறுதி எடுத்துக்கோ"
என்று அவர் கூறியது இதயத்தில் அறைந்தது போல்.
மனதிடம்,பணியில் நேர்மை,உழைப்பின் அருமை இவை தாண்டி தன் உடல் சுமக்க தடுமாறும் நிலையிலும் குடும்ப பாரம் சுமக்கும் அவரை வணங்கி வந்தேன்.
மனிதர்களைப் படிக்கத் துவங்குகிறேன்.
மனம்,குணம் முழுமை அடைய..
-
மனிதநேயம் என்பது
தான் நனைந்தாலும்
பரவாயில்லை தன்னை
நம்பி இருக்கும்
கோழிக் குஞ்சை
நனையாது பாதுகாப்பது..!!
-
மனிதநேயம் என்பது
வயதாக வயதாக
மறைந்து போகின்றது
ஒருநாளும் அது
மரித்து போவதில்லை..!!!-
பிறர் மீது அக்கறை கொள்ளுதல்.
ஏழ்மையில் உள்ளவர்களையும் நமக்கு நிகரானவர்கள் என ஏற்கும் தன்மை .
நாம் கொஞ்சம் கடப்பாடு செய்வது போல் தான் தோன்றும்.இருந்தாலும் பரவாயில்லை இயன்றவரை உதவுவது தப்பு இல்லை...
-