பகுத்தறியும் அறிவுதனை
மானிடர்க்கு தந்த இறை
அனைத்தையும் நேசிக்க
மனதிற்கு தந்த நிறை
வாழும் நாள் சிறிதென்று
பகையில்லா வாழென்று
தன்னைப் போல் சகலத்தையும்
சரிசமமாய் நினையென்று
அந்நிலைக்கோர் பெயர் தந்தான்
மனித நேயமென்று-
வீச்சமும் உண்டு வாசமும் உண்டு
வாசனை நுகர்வதும்
வீச்சத்தை களைவதும்
நுகர்ந்து பார்க்கும்
மனங்களில் உண்டு-
மின்விசிறி காதல் சொன்னது
வெக்கை தணிக்க துணைக்கு
தன் சிறகுகள் நடுவில்
இடைவெளி நிரப்பிடு என-
இருக்கும் போது தெரிவதில்லை காலத்தின் உன்னதம்
கடந்த பின்பு கிடைப்பதில்லை நேரத்தின் உன்னதம்
நேற்றைய நினைவு கனவாய் கலைய
இன்றைய நினைவு விரைவாய் நகர
நாளையை எண்ணியே நாளும் நகருதே-
தேடல் இருக்குமிடத்தை தேடி
கண்டுவிடல் அது உள்ள உடலை
நட்பு அந்த உடலோடு பழக்கம்
அளித்தல் அங்கு நாம் காட்டும் அன்பு
அது விளைந்து நம்மையும் தாமாக்கும்
களர்நிலத்தில் விதைக்க விதை விரைவில் மடியும்
விளை நிலத்தில் விதைக்க பன்மடங்காய் பெருகும்
விளையும் நிலம் பார்த்தே விதைப்பதில் தான்
அன்பை பெறுகின்ற சூட்சுமம் உள்ளது
-
பொய்யான ஒப்பனையை
முகத்தில் காட்சிகளாய்
வலியும் சோகமும்
சில உணர்வுகள்
மிதமிஞ்சும் காட்சிகளை
முகத்தில் மெருகூட்டும்
மகிழ்ச்சி களிப்புகள்
சில உணர்வுகள்
மனதோடு ரணங்களாய்
ஏமாற்றம் துரோகமுத்துடன்
இழப்பும் தோல்வியும்
சில உணர்வுகள்
மனதில் புதைந்து சமாதியாயும்
எரிந்து சாம்பல் கூட கரைந்தும்
உணர்வின் சில உணர்வுகள்
-
தனக்கென வருகையில் மனதின் தைரியம்
உறவின் வரிசையில் கருணை பாசமும்
நட்பு பழக்கத்தில் ஆறுதல் வார்த்தையும்
மாபெரும் நிவாரணி இதற்கு ஈடில்லையே
-
முயற்சியே பிரதானமாய்
நம்பிக்கையில் நம் கைகோர்த்து
தொடங்கியது துலங்கவேண்டி
கற்பனை எதிர்பார்ப்புகள்
கண்முன்னே காட்சிகளாய்
இனி எதிர்பார்ப்பிற்கு உயிரூட்டல்
முயற்சி உழைப்புடன் தொடக்கம்
-
ஆசை இல்லா மனதில்
ஆசை என்னும் காற்று
தென்றலாய் வருடிச் செல்ல
பாதை தந்த உடலில்
என் ஆசை தென்றல் மட்டும்
மூச்சுள்ள வரை சுவாசமாய்
என்னுள்ளே அதன் வாசமாய்
வாழும் வரை போதுமே
வேறு ஏதும் இல்லையே
தென்றலோடு என் பயணம்
நினைத்தவுடன் நடக்க வேண்டும்
-