அர்ப்பணிப்பும்
அதீத அன்பும்
அக்கறையும்
அனுபவமும் கலந்தது
அம்மாவின் கைமணம்...
-
சலிப்பும் ஓய்வும்
தற்கொலைக்கு சமம்
அர்ப்பணிப்பும்
அதீத அன்பும்
அக்கறையும்
அனுபவமும் கலந்தது
அம்மாவின் கைமணம்...
-
ரசனை இருந்தால்
அவன் கவிஞன்
ரசனையோடு
பொறுமையும் இருந்தால் தான்
அவன் ஓவியன்
-
உதவியும் தேவை தான்
தடுமாறும் போது தாங்கிப் பிடிக்க
தடம் மாறும் போது
நல்வழி காட்ட-
மழையும் தான்
தவம் செய்ததோ
வெறுமனே மண்ணை
நனைக்க வந்தது
மங்கையையும் சேர்த்து
நனைத்துக் கொண்டிருக்கிறது-
இது கோபமில்லை
ஆதங்கம் தான்
படிக்கும் வயதில்
பாழும் வலைதளங்களில்
சிக்கிச் சீரழிவது கண்டு...-