கடுகாய்
உலகின்
கண்களுக்குப்
புலப்பட்டாலும்;
கடலில்
அமிழ்ந்திருக்கும்
இமயம் இவனென,
உற்சாகப்படுத்தும் ஒவ்வொரு பெற்றோரும்,
"பேரன்பின் பெரும்
அடையாளம்."-
பேரன்பின் நிழலில் பூட்டி
வைக்குமிந்த அடிமை
உத்தியோகம் சலித்து
விட்டதெனக்கு...
பெருந்துயரின் தகிப்பில் தள்ளி
விட்டு ஒழிந்து போவென்ற
சாபம் போதுமெனக்கு...!-
தந்தையின் அன்பு...
அவர் இருக்கும் போது காட்டியது அன்பா
எனும் கேள்வி தான்...
இன்று அது தான் உண்மையான அன்பு
என உணர வைக்கின்றது...
சொன்னதை எல்லாம் தவறாமல்
செய்து விடுவேன்...
அப்படியே எதிர்மாறாக...
அந்த எதிர்மாறு கூட ஏமாற்றமாய்
போனதின்று...-
எத்தனை முறை காயப்பட்டாலும்
எத்தனை முறை கோவப்பட்டாலும்
அந்த ஒருவரின்
ஒற்றை வரி குறுஞ்செய்திக்காக
ஒருநாள் முழுவதும் அலைபேசி
காலடியில் காத்திருக்க வைக்கும் மகிமை...-
விட்டுட்டு தான்
போவாய் என்று
தெரிந்து
இருந்தால்
கொஞ்சம்
மெதுவாகவே
காதலித்து
ஆழமாகவே
உன்னுள்
இருந்திருப்பேன் 🦋-
ஆச்சர்யமில்லாத வாழ்வில்
ஆர்ப்பாட்டமின்றி அமைதியாய்
நுழையுமொரு பேரன்பில்
திளைக்கும் மனதிற்குள்
ஆயிரமாயிரம் வானவில்லின்
பெருங்கணங்கள் அத்தனை
எளிதில் வெளுப்பதில்லை
தொலைந்த பின்பும்...!-
பேரன்பின் அடையாளம் என்பது, வாளினால் என்னை வெட்டிடும் உன் கைகளுக்கு, மயிலிறகின் ஸ்பரிசம் தருவது.
-
வெற்றிடத்தை நிரப்பும் ஏதோவொரு செய்கையே பேரன்பின் மகோன்னதம்...
-
சண்டைக்கு பின்
கோபங்களையும்
பிடிவாதங்களையும்
விட்டு விட்டு முதலில்
நாமே பேசிட
துவங்குவது...
பேரன்பின்
வெளிப்பாடேயன்றி
அது சுயமரியாதையின்
தோல்வியல்ல...!!!-