சித்தார்த்தனை
புத்தனாக்க
ஒரு போதிமரம்
போதுமாயிருந்தது
ஒரு
சர்வாதிகாரப் பித்தனை
நல் பக்தனாக்க தான்
எத்தனை
புத்தன் வந்தாலும்
பத்தவில்லை-
உண்மை உள்ளங்களை
வேதனைப்படுத்தினால்
உனக்கு கடுகளவு
நிம்மதியும் கூட கிடைக்காது!-
நடப்பதெதுவும்
பிடிக்காதப் போது
ஒரு புத்தரைப்
போலத் தான்
அமர்ந்துக் கொள்ள
வேண்டிருக்கிறது!
அமைதியாக..!-
அத்தனைக்கும்
ஆசைப்படு...
இழப்புகளை
சந்திக்கும்
துணிவிருந்தால் மட்டும்.-
பட்டுப் போகாமலே கொலையுதிர் மரமாக்கும்
விலகிய சித்தார்தர்களின் மௌனம்
*யசோதரைகளுக்கு*
-
ரத்தம் வராமல் ஒருவரை கொன்றுவிடும்
கூர்மையான ஆயுதம் மனிதனின் நாக்கு...
-கௌதம புத்தர்✍️-
அறியாமையின் இருளில்
இயல்பாகவும் இருந்திடலாம்
ஆனால் இயலாமையின் ஒளியில்
எதுவும் செய்ய முடியாமல் இருப்பதே
நெஞ்சில் நெருடல் நெருஞ்சி முள்ளாய்-
நேசம் உடைபட்டு
பிரிவுற்ற மனங்களின்
ஆறாத ரணம் ஒவ்வொன்றும்
ஒரு கதையை எழுதுகிறது
அக்கதைகள் காட்சிகளாக
கனவாக, நினைவாக
கணங்களை நிரப்புகிறது
மீளவும் அடுத்த கதைக்கான
நகர்விற்குமான இடைவெளியில்
மெல்ல மெல்லமாய் ஒரு புத்தர் குடியேறுகிறார்
மீண்டும் வந்து தட்டும் நினைவலையில்
புத்தரின் கையில் ஆயுதங்கள் தரப்படுகின்றன
சாதூர்யமாக புத்தரை மீட்டெடுக்க மனம்
செய்யும் போராட்டங்களில் காயங்களால்
புத்தரின் மேனி நிரப்பப்படுகிறது
கையில் ஏந்திய ஆயுதங்களை அவர்
விடாது பிடித்திருக்கிறார், மெல்ல மெல்ல
தன்னை இரவின் கோரங்களில் வார்த்து
உதிர உஷ்ணத்தில் மெருகேற்றி தனித்து
போருக்குத் தயாராகிறார்
-