நினைத்து பார்க்கையில்
நிழலுக்கு கூட
கண்ணீர் சுரக்கிறது..!-
அன்பின் ஆணிவேர் அம்மா👩👧
தாய்மண்ணை நேசிப்போம்🙏
தமிழ்மொழியை சுவாசிப்போம்🖤
🖤🖤🖤
அன்பையும் தியாகத்தையும்
வார்த்தைகளில் உரைக்காது
செய்கையில் உணர்த்திடும்
தேவதை அம்மா..!-
எல்லோருக்காகவும்
யோசியுங்கள்.,
எல்லோரைப் பற்றியும்
யோசியுங்கள்.,
அதற்காக
உங்களைப் பற்றி யோசிக்க
எவரும் இல்லை என்பதை
மறந்துவிட்டு
யோசிக்காதீர்கள்🖤-
மீள நினைக்கும் பொழுதெல்லாம்
மீளமுடியா தொலைவிற்கு கொண்டுசெல்கிறது
நின் நினைவுகள்🖤-
எதுவென
தெரியா வயதிலேயே
பிறரை சார்ந்திராது
சுயமாய் வாழக்
கற்றுக்கொடுத்தவர்
என் அம்மா..!-
எல்லாம் தெரிந்தும்
எதுவும் தெரியாதவனைப்
போல் அவன் இருக்க
ஒருதலையாகிப்போனது
அவள் காதல்🖤-
எல்லோரும் காரிருளை
அழகாக்கிய
நிலவை ரசிக்க.,
நிலவோ தன் ஒளிக்கு
அர்த்தம் கொடுத்த
காரிருளை ரசித்தது..!-