22 SEP 2017 AT 19:57
30 SEP 2020 AT 13:08
வீதியோரம் திரியும்
விலாசமற்ற தேவதை அவள்...
யாருக்கோ பிடிக்காமல்
தூக்கி எறிந்த ஆடையிலும்
அத்துணை அழகு அவள் !
பசியில் பரிதவித்திருந்தது அந்த
பிஞ்சு முகம்
ஆடிக்காரில் கடந்து சென்றோர்
கெட்டு போனதாய்
விட்டெரிந்த பொட்டலத்தை பிரித்து
பசியில் ஓலமிட்ட வயிற்றை
அரைகுறையாக அவள்
நிரப்பியது கண்டதும்
விசாரணை குற்றவாளி ஆகிவிட்டேன் !
மனசாட்சியின் முன். . .
நேற்று வேண்டாமென வீணடித்த
அந்த ஒருகவள உணவை எண்ணி...
_பாலைவனத்து_பூ
-
26 NOV 2018 AT 21:55
பசி என்று
வந்தவரிடத்து
இல்லை எனக் கூறி
முன்னோர்கள் வந்து
விட்டார்கள் என்று
காக்கைக்கு உணவு
வைக்கும் வினோதமான
மொட்டை மாடி உலகம் இதுவே ...
-
6 MAR 2019 AT 22:08
இல்லை என்று
உறுதி செய்த பின்னும்...
ஏதோவொரு
நப்பாசையில்....
நமக்கு கிடைக்காதா
என்ற ஏக்கத்தில்....
ஏழைச்சிறுமி
எட்டிப்பார்த்தபடி...-