QUOTES ON #நான்

#நான் quotes

Trending | Latest
17 DEC 2019 AT 16:13

ஒரே ஒருமுறை மட்டும்
என் உள்ளத்தின்
பக்கங்களை
முழுமையாக
புரட்டிப் பார்த்து இதழ்
பதித்து சொல்லிவிடு!!

நானும் நேசிக்க
சிறந்தவள் தான் என்றும் ..
#5000

-


9 OCT 2019 AT 19:32

shal

-


5 FEB 2019 AT 8:39

நான் நானாகவே
எழுதுகிறேன்
ரசிக்கின்றேன்
விமர்சிக்கின்றேன்

நான் நானாக
வாழும் தைரியம்
உள்ளவளாய்
இருக்கின்றேன்....

-


25 JUN 2021 AT 18:39

கவிதை பைத்தியமே
உனக்கு கவிதையால்
வைத்தியம் பார்க்க
விரைவில்
ஒரு கவிதை எழுது...

-


14 AUG 2019 AT 22:33

நீ உடைத்த நான்
நொறுங்கித்தான்
நகர்கிறேன் 
உனைவிட்டு!

-


5 AUG 2021 AT 8:59

புத்தம் புதிய தாள் இது
அடித்தல் திருத்தல் இன்றி
அழகாய் எழுதி முடிக்க
முக்கிய தேவை
பொறுமை...

-


3 AUG 2021 AT 18:35

விடைபெற்ற பின்
நிச்சயம் பிறர் மனதில்
நிலைத்திருப்பேன்...

-


6 JUL 2021 AT 21:53

என்னை நீங்க
கட்டமைக்க வேணாம்

என்னுடைய நிழலாய்
என் பிம்பம் உள்ளது

-


24 OCT 2019 AT 12:27

நீ முறைக்க
நான் சிரிப்பேன்
நீ பறிக்க
நான் பூப்பேன்
நீ பறக்க
நான் சிறகாவேன்
நீ கடிக்க
நான் இனிப்பேன்
நீ விலக
நான் தொடர்வேன்
நீ துயில
நான் ரசிப்பேன்
நீீ பிறக்க
நான் சுமப்பேன்
நீ நடக்க
நான் துணையாவேன்...!

-