Nirvi   (நிர்வி)
376 Followers · 273 Following

Joined 9 February 2019


Joined 9 February 2019
12 MAR 2021 AT 8:27

நிறைந்திருக்கிறது
நேசமும்
பயமும்

திறந்து பாரக்கையில்
கொஞ்சம் திருத்தியமைக்கிறேன்

வரிகளின் மத்தியில்
மாட்டிக்கொள்கிறது மனம்.

-


10 MAR 2021 AT 22:49

வசந்தத்தின்
வாசம்
கண்டேன்
அருகில் நீ...!

-


10 MAR 2021 AT 22:43

சொற்களுக்கோ பஞ்சமில்லை
கற்பனைக்கோ எல்லையில்லை
ஆரம்பமோ முடிவோ இல்லாமல்
விட்ட இடத்தில் தொடங்கி
முற்றுப்பெறாமலே விடப்பட்டது
அந்தக் கவிதை

-


31 OCT 2019 AT 16:45

ஒப்பாரி

-


19 FEB 2021 AT 19:07

கரையும் நிலவுக்கு
குறையேதுமில்லை

ஒளியைத் தவிர

அதே இரவு
அதே வானம்
அதே குளிர்
அதே இதம்

-


19 FEB 2021 AT 12:07

ஒவ்வொரு
சந்திப்பிலும்
தித்திக்கும்
பார்வையுடன்
சுவையூட்டியாக
நின் முத்தம்
கடைசிமிடறு வரை

-


16 FEB 2021 AT 18:05

உண்டென்று
சொல்லவில்லை

சொல்லியிருக்கலாம்
நானும்

உன்னோடு
எல்லாமென...!

-


16 FEB 2021 AT 17:57

அண்டத்தைப் பழிக்காதே நேசா

அகம் தானே திசை - அதில்

கூத்தாட்டுக் கோவன் தனை தொழுதால்

கூடிடுமே நாளு மது

-


10 DEC 2020 AT 8:32

நெஞ்சக்கிடக்கையில்
புடைக்கும் நரம்புகளில்
பரவித்திரியும் ஆராவென
ஒளிந்து கொண்டாய்

சுழலும் பூமியில்
விரியும் வானமாய்
எனக்குள் நீ..!

-


10 DEC 2020 AT 8:07

உற்று கவனிக்காதவரை

நொடி முள்ளின் சத்தத்தை

அறியவில்லை காதுகள்


-


Fetching Nirvi Quotes