கொட்டும் அருவியின் அரவணைப்பு எங்கே
முட்டும் மேகத்தின்
மோகம் எங்கே
சிட்டும் சிறகின்
சத்தம் எங்கே
மட்டின் மரத்தின்
மகரந்தம் எங்கே
-
artofmemories2019@gmail.com
Insta id :artofmemories
(For Black and whi... read more
திரியே திரியே
கார்குழல் குடுவையே
மிசையே மிசையே
ஆர்நவில் திகிரியே
விசியே விசியே
தொடிகளன் கரங்களே
-
வியக்கும் விசித்திரம் நிகழும் காலமே
படர்ந்த பசுமை உறங்கும்
கிராமமே
அழுத நீர்வீழ்ச்சி வறண்ட
வாழ்வியலே-
சாரல் மழையே
நீ விழுந்த இடத்தில்
தொடங்கிய
காதல் வலையே
நீ சிக்கிய இடத்தில்
முடங்கிய
போதல் பகையே
நீ கடந்த இடத்தில்
தவிக்கிறேன்-
தினம் தினம் பார்த்த போது
வெகு சில நாட்களாக
பழகிய பாசபோர்வை எனை
தொட்டு மூடி சென்றதே
வரி வரி எழுதும் போது
பலபல கதைகள் நூறு
பக்கம் பக்கம் திருப்பும் போது
உனை கடப்பேனடி-
மழைத்துளி மண்ணில் மேல் சாயாதோ
நினைவு இருக்கும் வரை
காதல் தொலையாதோ-
வறட்சியின் வடிவத்தை மாற்றிவைத்தால்
வளர்ச்சியின்
உருவங்கள்
உயிராகும்-
தனிமையில் கிறக்கம் எடுத்து வந்தாய்
புதுமைகள் நாரில் பூத்தொடுத்தாய்
வலிமையில் வளங்களை உணரவைத்தாய்
-
நீரின்றி தேடல் இனிதோ
வாழ்வின்றி நாடகம் எளிது
பொய்யின்றி தோல்வி புதிதோ
யாழின்றி நரம்பு புதிது
நீயின்றி நாடும் பெரிதோ
உறவின்றி உணர்வே கொடிது-