வாழ்வியலை வானம் வரையிலும்
ஆராய்ந்து கொண்டிருந்த
சிந்தனையை...
வேண்டியதெதுவும் கண்ணெதிரே
காத்திருக்காதென்று கீறிப்போகிறது...
அருகில் பூமியை கிளறி
கொண்டிருந்த கோழியின் நகங்கள்...!-
மேக மூட்டம் அல்ல அது
கார்பன் புகை மூட்டம்
தார் பாதை வழி
சுவசப்பையும் ஏனோ
அடைத்து ஆக்சிஜன்
இன்றி தவிக்க
மூச்செடுக்கவும் வழியின்றி
களைத்து பாதையோரம்
ஓர் பெரியவர்
ஓயாத அந்த வாகன
இரைச்சளின் நடுவே
நகரவும் வழியின்றி...
கண்டதும் வரிகளானது
நெஞ்சமும் கொஞ்சம்
புண்ணானது...
-
இனங்களை
அழித்துவிட்டு
தினங்களை
கொண்டாடி
கொண்டிருக்கிறோம்!!!
"சிட்டுக்குருவிகள் தினம்".-
தலையில் மண்ணை வாரிக் கொட்டினாலும்
தூக்கி எறிந்துச் சென்றாலும்
துவளாமல் நிழல் தரும்
சுவாசிக்கக் காற்றுத் தரும்
உணவாக மருந்தாக தன் உயிரைத் தரும்
இன்னலிலும் உயிர்த்தெழும்
மனப்பக்குவம் தரும்
விதைகளை விதைத்திடுவோம் இன்று.
சுற்றுச்சூழல் தின நல்வாழ்த்துக்களுடன்
காலை வணக்கம்.-
பூமியில் நிகழும்
புகைப்பிடிப்புகளினால்
இயற்கையின்
நுரையிரலில்
விழுந்தது
ஓட்டை.
ஓசோன் படலத்தில்
புற்றுநோயாய்!-
நீ உயிர் வாழ நான் பிராணவாயுவை
உண்டாக்குகின்றேன்.
நீ என்ன செய்து கொண்டிருக்கின்றாய்???-