உதிர்ந்தாலும் உன் மணமே வீசுகிறது
காதல் கொண்ட என் மனம்.-
தாமரை இலையின்
மேல் வீழும் நீர்துளி போல்
தனித்தனியே ஒன்றாக
நீங்காத ஆசைகளை
நீக்கிடும் தவமாக.
-
தனக்கல்ல என்று தெரிந்தும் துளி துளியாய் சேமிக்கும் தேனியின் தேன்துளிப் போல்.
-
நிதமும் பழகிய இடம்
அந்நியமாய் தோன்றும் நொடி
தேற்ற ஆளில்லா நொடி
விலக மனமின்றி விலகி நிற்கும் நொடி
வார்த்தைகள் மனக் குமுறல்களாகி
மௌனங்கள் பிறக்கின்ற நொடி
இவ்வளவு நொடிகளை கொண்ட ஓர் நிமிடத்தை கடக்கும் ஓர் நொடியில்
இதயத்தில் எழும் ஓர் வலி
மறைக்கப்படும் கவசம் தான்
சிலரின் புன்னகையோ ?
-
ஒரு விரல் தீண்டினால்
பெண்மை நாணுமாம்...
ஓர் காலத்தில் உண்மையது..
இப்போது மங்கையை தீண்டுவது ஓர் விரல் அல்லவே!
பார்வைகளும் வார்த்தைகளும்
உரசல்களும் வெளிக்கொணர்வது நாணமல்ல எரிச்சல்களே.
கற்பை உடலில் புகுத்திடும் உலகத்தில்
கண்ணியத்தை கண்ணில் காக்கும் மாந்தர்கள் மிக அரிது.
துணிந்து நில் பெண்ணினமே
நீயாக தரும் வரை திருடப்படும்
உடல்பசிக்குப் பெயர் கற்பு அல்லவே!-
வலி தாங்கும் பெண்மைக்கு வலி கொடுக்கும் வன்மம்...
உயிர் கொடுக்கும் தாய்மையின் உயிர் பறிக்கும் அவலம்...
உயிர் காக்கும் விரல்கள்
உதிரத்தில் உரையும் வேதனை
பச்சிளம் பெண்ணோ
பள்ளிச் சிறுமியோ
குமரிப் பெண்ணோ
கூன்விழுந்த கிழவியோ
பெண்ணை சதை பிண்டமாகவே நினைத்து சிதைத்தெறியும் கயவர் கூட்டமே எப்போது உணர்வீர்கள் உன் உடலில் ஓடும் முதல் துளி ரத்தமும் உன் தாயின் சதை தந்தது என்று ?
-
முதுகில் குத்திடும் கோழையாய் வாழ்வதைவிட
எதிரில் நின்று போரிடும் வீரத்தில் மரணிப்பது மேல்-