இந்த நாளின் இறுதியில்-என்
இறுக்கமான மனநிலையை
இளக்கமாக்கிட சில சொற்களையும்,
பயணிக்கும் பாதையில்
தொடர்ந்து பயணிக்க
சில நம்பிக்கை விதைகளையும்
பெற்று கொண்டதில் பெருமகிழ்ச்சி
-
*பேனா முனையில் பெருங்காதல் கொண்டவள்.
*புத்த... read more
இடைவெளி இருக்கும் போது
உடைக்கப்படும் நம்பிக்கை
அவ்விடைவெளியை
நிரந்தரமாக்கி விடும்.-
உனக்கு மட்டுமே தெரியும்
என் கண்ணீர் எப்போது
கரை உடைக்கும் என்று.
உனக்கு மட்டுமே தெரியும்
என் கோபங்கள் எப்போது
கொந்தளிக்கும் என்று.
உனக்கு மட்டுமே தெரியும்
என் மனசு எப்போது
மகிழ்ந்திருக்கும் என்று.
உனக்கு மட்டுமே தெரியும்
என் உணர்வுகளின் உறைவிடம்
எங்குள்ளதென்று??????
-
சிலரின் கதைகளில்
நான் நாயகி
சிலரின் கதைகளில்
நான் வில்லி
சிலரின் கதைகளில
நான் introvert
சிலரின் கதைகளில்
நான் extrovert
சிலரின் கதைகளில்
நான் பிடித்த ஆசிரியை
சிலரின் கதைகளில்
நான் பிடிக்காத ஆசிரியை
சிலரின் கதைகளில்
நான் motivator
சிலரின் கதைகளில்
நான் Demotivator
யார் கதைகளில் எப்படி இருப்பினும்
என் கதையில் நான் என்னவாய் இருக்கிறேன்?
என்று தான் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்-
disputes are common to
all the people -but
reunion is not that much easy
for honest people-
Some people are
Ready to lose
Even their self respect
To fulfill their needs.-
அக்கறையில் அடிக்கும்
அடிகள் எல்லாம்
தண்டனையில் சேராது.
அன்பாகக் கொடுக்கும்
அறிவுரைகள் எல்லாம்
அவமதிப்பில் சேராது.
திருத்துவதற்காய் திட்டும்
திட்டுகள் எல்லாம்
அவமரியாதையில் சேராது.
வாழ்வில் உயர நினைப்பவன்
பொறுத்துக் கொள்வான்.
உருப்படாமல் போக நினைப்பவன்
எதிர்த்து நிற்பான்.
-
மெளனத்தைக் கற்கும் வரை,
வார்த்தைகள் தான் காயப்படுத்தும்
வார்த்தைகளே மருந்திடும்,
வார்த்தைகள் தான் வசியப்படுத்தும்,
வார்த்தைகளே வதைப்படுத்தும்,
வார்த்தைகள் தான் ஊதசீனப்படுத்தும்,
வார்த்தைகளே ஊக்கப்படுத்தும்,
என்றிருந்தேன்.
மௌனத்தைக் கற்ற பின்னே
வார்த்தைகளின் வலிமையே
மௌனத்திற்குள் தான்
மறைந்திருக்கிறதென கண்டு கொண்டேன்.-
Register your normal action
As an Extrordinary action
In other's mind is
More important than
Doing extraordinary actions-