QUOTES ON #காதல்_பார்வை

#காதல்_பார்வை quotes

Trending | Latest
22 JUN 2020 AT 23:32

இரு விழி கொண்டு
ஒருமுறையேனும்
நோக்கி செல்...
காதல் கொண்ட
அவளின் இதயத்தின்
வலிக்கு வழியாகி
ஆகச் சிறந்த
மருந்தாகி
செல்லட்டும்!

-


13 JUN 2020 AT 16:27

விடாத
மழையிலும்
விழி நோக்கும்
அழகிலும்
கொட்டித்தீர்த்த
காதல்
பார்வைகள்
மொத்தமாய்
என்னை
உன்னுள்
மெதுவாய்
தொலைந்து
போகவே
வைக்கிறது!

-


6 SEP 2021 AT 12:07

காதல் பார்வையை கடத்தி செல்ல வந்த
மழையை பிடித்து தடுத்திட
மாட்டேனா...?

-



பதுமையென மற்றவர்கள்
வர்ணிக்கையில்
சொல்லாமல் கொள்ளாமல்
மனது ஓடிவிடுகிறது
உரிமையோடு தழுவிய
என்னவனின் ரசனையான
காதல் பார்வையிடம்.!.

-


26 JUN 2019 AT 0:59

ஐந்தே நாட்களில்
ஐயமே இன்றி..
ஊமை மொழிகளின்
வார்த்தைகள் வர்ணிக்கும்
மொழியை கடந்த
மௌன காதலின்
பாஷை புரிய
இணைந்து விட்டோம்
என் அன்பனே...

-


21 APR 2020 AT 9:52

அவளுக்கென நான் எழுதும்போதெல்லாம்
அவள் மறைந்துவிடுகிறாள் ..!
என்ன செய்ய என் கவிதை வரிகளுக்கு
மட்டும் விதிவிலக்கா என்ன காத்திருக்காமல்
அவளின் பார்வை படுவதற்கு...!

-


25 JAN 2021 AT 13:10

உன் காதல்
பார்வையால்
என்னை
அழைத்து
விடு....

-


22 SEP 2021 AT 15:13

இவளின்

கருந்துணியோ
வெளிர் மேனியை மறைக்க.....

கண்களில் பொங்கும் காதலை மறைக்க
வேறு திரை கிடைக்கவில்லை போல.....

-



உன் காதல் பார்வையால்
என் கருப்பு நிறமும்
வெட்கத்தால்
சிவப்பாக மாறிப் போகிறதடா
மடையா!!!

-