அமுலன் The king  
20 Followers · 23 Following

read more
Joined 20 November 2019


read more
Joined 20 November 2019
14 JUL 2022 AT 15:43

ஒரே வகை உணவானாலும்
அதன் ருசி ஒன்றுபோல்
இருப்பதில்லை அது
உண்டாக்கும் நபரின்
அன்பினை பொறுத்து சுவை
மாறுகிறது..!
ஆதலால் தான் அவள் கையால்
தரும் வேப்பங்கூட்டு கூட
அமிர்தமாய் இனிக்கிறது….!

❤️ 🍲 ❤️

-


13 JUL 2022 AT 17:17

உன் மனம் எனும்
சிறையில்
விடுதலை விரும்பா
கைதியாக ஆசை..!

💜 💕 🔒

-


13 JUL 2022 AT 17:09

உன் பொற்பாதங்களை
தாங்கிப்பிடிக்கும் போதெல்லாம்
என் இதயம் எனது
உள்ளங்கைக்கு வந்து
உனை தாங்க நினைக்கிறது
மென்மையை மென்மையால்
ஏந்திப்பிடிக்க..!

💕 🦶 ❤️

-


13 JUL 2022 AT 17:08

என் அன்பின் வெளிப்பாடாய்
உன் பாதம் தாங்கும் என்
கைகள் என்றென்றும்..!

💕 🦶 💗

-


28 JUN 2022 AT 20:49

உயிரென உருகி உள்ளமென கலந்து உறவுகளிடையே கோபமும் அதன் வார்த்தைகளும் வீரியமின்றி போவதில் அடங்கியுள்ளது கடலளவு கொட்டித்தீர்க்கும் அன்பு

-


27 JUN 2022 AT 1:36

வெளிர் மஞ்சள் நிலவே நீ மாநிறமாக மாறிவிடு என் மனம் கவர்ந்தவளின் அழகு முகமாக..!
என்னவளின் அழகினை நான் இரசிக்க நீ மட்டுமே இருக்கிறாய் என் அனாதரவற்ற இரவுகளில்

-


27 JUN 2022 AT 1:34

அவளே அதிசயமெனக்கு அதில் அவளின் வெட்கத்தை அதிசயமென பிரித்தறிய மாட்டேன் மாறாக பேரதிசயங்களின் ஒற்றை உணர்வு அது என தீரா ஆசை கொண்டு அதை இரசிப்பேன்

-


27 JUN 2022 AT 1:32

உனக்கென கொய்த அன்பின் உருவான மாலைகள் உன் தோள்களில் தவழ தவமிருந்து தகிக்கின்றன, காலமும் நேரமும் கனிகின்ற நாள் நோக்கி

-


27 JUN 2022 AT 1:28

எல்லாப் பறவைகளும்
பறந்தே ஆகவேண்டுமெனும்
கட்டாயங்கள்
ஏதுமில்லை.
சிலதுகள் அவளிடன் சரணாகதி அடைந்தும் கிடக்கலாம் சுய விருப்பத்துடன்.

-


27 JUN 2022 AT 1:26

சில நாட்களின் இரவுகள் மட்டும் ஏனோ நீண்டு விடுகிறது அவளின் நினைவுத் துணையின்றி

-


Fetching அமுலன் The king Quotes