ஹரிதாரணி சோமசுந்தரம்   (GRK ஹரிதாரணி S)
169 Followers · 97 Following

Tamil Novelist, Econometrician, Poet.


சிந்தனைக்கு அப்பாற்பட்ட சிறகுவிரிந்த பறவை.‍‌🕊
Joined 7 December 2017


Tamil Novelist, Econometrician, Poet.


சிந்தனைக்கு அப்பாற்பட்ட சிறகுவிரிந்த பறவை.‍‌🕊
Joined 7 December 2017

பெறமுடியாத சொத்து,
என் உயிரின் ஒரு பாதி,
என் கனவுகளின் வெற்றி,
நான் வயிற்றில் சுமந்த தாய்,
அன்பைப் பொழிவதில் தந்தை,
வார்த்தைகளால் வர்ணிக்க முடியா கவிதை,
வரம் தந்த கடவுளே வியக்கும் அழகி!

-



இதயத்தின் துடிப்பின்
மாற்றத்தில் அவளின்
மனதைப் படிக்கிறேன்.,
இது சத்தியமாய் காதலில்லை
தாய்மையெனும் பெரு வரத்தால்!

-



என்னில் கருவானாயென
நான் மகிழ்ந்திருக்கையில்
வயிற்றில் வளர்ந்திருந்தாய்
கருவாய் உருவாகிறாயென
நான் பூரித்திருக்கையில்
தேவதையாய் அவதரித்தாய்
கையில் கவிதையாய்
சிரித்துக் கொண்டே
வளர்ந்துவிட்டாயடி கண்ணே!
தரை தொட்டு தவழ்ந்து
நீ விளையாட களித்திருக்கிறேன்..

-



சிரிப்பு மாறாமல் பார்த்துக்
கொள்ளச் சொல்லும்
அழகான தேவதை நீ
தடுப்பூசியால் அழவைத்து
கசக்கும் மருந்தைத்தரும்
அன்பான ராட்சசி நான்!

-



கருவினில் இருந்தது போல்
கைகளில் சுருண்டு கொள்
நீ வளரும் வரை பொத்தி
வைக்கிறேன் கங்காருவாய்!.

#எழிலதிகாரம்

-



காதலிப்பது வெற்றியல்ல
பொறுமையாய் நின்று
பெருந்தன்மையாய்
கடக்க வேண்டும்
ஊடல் தருணங்களை!

-



என்னுயிர் மலரும்
தருணத்திற்கு தவமிருக்கிறேன்
நம் காதல் சொல்லி
கைகோர்க்கும் கனவிலிருக்கிறேன்!.

-



என் தாய் எனக்காகப் பாடிய
தாலாட்டை நினைவடுக்கில்
தேடிப்பார்த்து ஓய்ந்தேன்,
என் மகள் என்னோடு பாடத்
துடிக்கும் "ஊஉஆஆங்கஆ" வுடன்
ஒப்பிட்டு மகிழ்ந்திடுவதற்கு!

#எழிலதிகாரம்

-



எனக்குப் போட்டியாய்
என்னவனின் தோளில்
இடம்பிடித்த என் குறுநகலைக்
காணும் நேரமெல்லாம் என்
இதயம் நிறைந்த பெருமை
இரு விழிகளில் வழிகிறது!

#எழிலதிகாரம்

-



காற்றில்லா சுவாசமும்
நிறங்களற்ற வானவில்லும்
கற்பனையில்லா கவிதையும்
காதலையுணரா கவிஞனும்
ஒரு ரோஜாவில்லா காதலும்
இப்புவியில் சாத்தியமில்லை..
அந்த ரோஜாவினால் எனக்கான
உன் நேசமும் காதலும் மணம்
மாறாமல் தெரிவிக்கப்படுகிறதே!

-


Fetching ஹரிதாரணி சோமசுந்தரம் Quotes