அவனுக்கும் எனக்கும்
உண்டான ரகசியம்💖-
Surya Krishnan
(Suryakrishnan)
396 Followers · 52 Following
அப்பாவின் இளவரசி 👸,
அம்மாவின் மாமியார்,
தந்தையின் சாயலில் உருவான அழகிய காவியம் இவள்..
தந்தைய... read more
அம்மாவின் மாமியார்,
தந்தையின் சாயலில் உருவான அழகிய காவியம் இவள்..
தந்தைய... read more
Joined 23 March 2019
5 JAN 2024 AT 13:54
தீரா காதல் கொண்டு
அவனுக்கென எழுதும்
காதலில் நேற்றைய காதலன்
இன்று அவன் என் கணவன்!-
6 AUG 2022 AT 13:51
உலகின் அழகிய மொழி
எதுவென்று கேட்கிறான்
என் அன்பிற்கு இனியவன்,
உன்னையும் என்னையும்
சேர்த்த காதல் மொழியே
அழகென்றேன்!— % &-
14 JUL 2022 AT 21:59
நான் எழுதும்
அத்தனை கவிதைக்கும்
அர்த்தம் கொடுத்தால்
அவனென்றே பொருள்படும்!— % &-
19 JUN 2022 AT 22:10
நீண்ட நாட்களுக்கு பிறகு
அவனுக்கு எழுதப்படும்
வரிகள் அனைத்திலும்
என் தீரா காதல்கள்!— % &-
13 MAY 2022 AT 22:04
முற்று புள்ளி கொண்டு
முடித்து விட முடியாத
என் நீள் கவிதை அவன்!— % &-
21 APR 2022 AT 22:09
சின்ன சின்ன கனவு
கனவுகளை மறைக்கும்
பெரிய பெரிய கடமை
சொல்வதற்கு நிறைய கதை
அத்தனையும் மௌனத்தில்
மறைத்து புன்னகையில்
புதைந்திருக்கும்!— % &-
8 APR 2022 AT 22:02
இன்றெல்லாம்
மீண்டும் மீண்டும்
என்னை மீளச்செய்வது
அவன் காதல்கள் மட்டுமே!— % &-