சொல்லி வளருங்கள்!!!
சுகந்திர தினமன்று
சுட்டி டீவி பார்க்கும்
சுட்டிக் குழந்தைகளுக்கு..!!!
சுலபமாய் கிடைத்திட வில்லை
இந்த சுகமான சுகந்திரம்.....
சுத்தமாய் இருந்த பூமியில்
சூழ்ச்சியை விதைத்தவர்களிடம் போராடி....
சில புரட்சி ஆத்மாக்கள் உயிர் நீத்து.....
சுயராஜ்யம் கேட்டு.....
வந்தேமாதரமென முழக்கம் எழுப்பி.....
கத்தி இன்றி ரத்தமின்றி கலப்பில்லாமல் கிடைத்தது.....
இந்த சுகந்திரம்.....
கலப்படம் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள் என்று
சொல்லி வளருங்கள்.......
-
கடந்து செல்லும் மேகங்கள்
என் வாழ்வில் பல இருந்தாலும்
நான் கடக்க இயலா கதிர் வீசும் பகல்
கனவாய்.....
நீ மட்டுமே இருக்கின்றாய்......-
வாயாடிய பூக்கள்......
இன்று வார்த்தை உதிர்க்கவே யோசிக்கிறது.....
அவன் வியர்வை வாசத்தின் அருகினில்
அமர்ந்து தோள் சாய்கையில்.....-
உறைந்த அவன் அன்பினில்
நனைந்திடத்தான்
என் காலங்கள் யாவும்
பாலை மனதி(ணலி)ல் கரைகிறதோ!!!!!-
சிலரின் ஒருதலைக்காதல்
சலிப்பில்லாமல்......
சகஜமாய் பேசி சிரித்துக்கொண்டு
தோளில் கைப்போட்டு உடன் வருகிறது.....
நட்பு என்ற போர்வைக்குள்
மறைந்துக்கொண்டு.....-
வாடிய பூக்களில்......
சிதறிய மணத்தை போல
நீ அருகில் இருந்தாலும்
பழைய உன்னை
என் நினைவுகளில் தேடி
புதிய பல நினைவுகளை.......
சேகரித்து கொண்டுதான்
இருக்குகிறேன்......-
வாடிய பூக்களில்......
சிதறிய மணத்தை போல
நீ அருகில் இருந்தாலும்
பழைய உன்னை
என் நினைவுகளில் தேடி
புதிய பல நினைவுகளை.......
சேகரித்து கொண்டுதான்
இருக்குகிறேன்......-
நினைவுகள் ஊஞ்சலாட......
சுயநினைவு சுயம் மறந்து போக.......
கண்ணீர் துளிகள் கவிதை
எழுதுகிறது......
அடுத்த நொடியே கசக்கியும்
எரியப்படுகிறது.......
அடுத்த நாள் பிறர் கண்ணுக்கு
தெரியாமலேயே மறைந்தும்
விடுகிறது.......
ஆனால் , உன் மீதான காதல் மட்டும்
கறை கடந்து செல்ல
மறுக்கிறது.......-
ஒப்புக்கொள்ள மறுக்கிறேன்........
மொழி அறியா நம் விழிகள்
பேசிக்கொள்ளும் காதல்
பதங்களை......-
மாறி
நிலவு சுடும் கதிரவனாக மாறி.....
என் நினைவுகள் என்றும்
உன் பெயர் சொல்லி க(எ)ரிக்கின்றது......
ஒவ்வொரு நாளும் எந்த
கண்ணீராய்........-