பல்லவி ஒன்று பாடக் கேட்டத்தில்
மெய் மறந்து நின்றேன் யானும்-
என் கவிதைகளில்
முத்தங்களைப்
பற்றியே அதிகமாக
எழுதுகிறேனாம்...
என்
முத்தக் கவிதைகளை
நான் குறைக்க
வேண்டுமென்றால்...
நீயும்
உன் முத்தங்களை
குறைத்துக் கொள்ளத்தான்
வேண்டும் !!
-
மை சொட்டும்
என் பேனா மையல்
சிந்திடும் போதெல்லாம்
வடித்துச் சிதறிய
கவிதைத் துளிகளில்
மின்னிக் கொள்வது
உந்தன் பெயரடா!-
வெண்பஞ்சு
மேகங்களுக்குள்
தவழும்
சிறுப் பனிப் பூக்கள்
போல
காற்றுதறிய
வார்தைகளில் எல்லாம்
உந்தன்
பெயரின் வண்ணம்!-
எப்படி இவ்வளவு
காதலோடு
கவிதை எழுதுகிறாய்
என மற்றவர்கள்
என்னிடம் கேட்பதில்
எந்த ஆச்சர்யமுமில்லை...
ஆனால் நீயும்
கேட்பதுதான் வியப்பாய்
இருக்கிறது எனக்கு...
என்னைக் காதலால்
அபிஷேகம் செய்யும்
என் கவிதைக் கடவுளே
நீதானே !!
-
#ஆணியம் #
பெண்ணியம் பாடும் பெண்கவிஞர்கள்
இங்குண்டு ஆணியம் பேசும்
ஆண்கவிஞர்கள் வெகு சிலரே...
(கீழே படிக்கவும்)-
பகிரப்பட்ட நம் வார்த்தைகளை
பகலவனோடு பகிர்ந்து கொண்டே
சுவைதீரப் பருகித் தீர்த்தேன்
சுடச்சுடக் காதல் கவி!-