"இப்போ தான் உங்களுக்கு கால் பண்ணலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள நீங்களே கால் பண்ணிட்டீங்க"
(சொல்லும் போது சுவாரஸ்யமாக
கேட்கும் போது கொலகாண்டாக)-
நாம் அமர்ந்து பேசிய மர நிழல்..
உயிரற்ற பிம்பங்களை வெறுமனே..
சுமந்து கொண்டு நிற்கிறது..!
நாம் கதைகள் பேசிய வகுப்பறை..
நம் நினைவுகளை சுவாசித்து..
வாழ்ந்து கொண்டு இருக்கிறது..!
நாம் நடந்து சென்ற பாதைகள்..
நம் சுவடுகளை மீண்டும் ஏந்த..
காத்துக் கொண்டு இருக்கிறது..!
நாம் சுற்றித் திரிந்த நூலகம்..
அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களால்..
அவதியுற்றுக் கிடக்கிறது..!
நாம் மீண்டும் சந்திப்போம்...
நம் நட்பினை புதுப்பிப்போம்..
என்று இன்னமும் நம்புகிறது..!
நாம் வாழ்ந்த கல்லூரி..!-
பெண் பிள்ளை மட்டுமல்ல
ஆண் பிள்ளை பெற்றாலும்
வயிற்றில் நெருப்பைக் கட்டி
கொண்டது போல் தான் உள்ளது
கள் உடம்பிற்கு நல்லது என்றாலும்
கள் குடிப்பலர்களை பிடிப்பதில்லை
ஆனால் கல்லூரி உணவகத்திலே
சில்லி வோட்கா விற்பனை
செய்கிறார்கள் அதன் ருசி
மாணவர்களை வெகுவாய் ஈர்கிறது..
ஸ்ப்ரைடுடன் பச்சைமிளகாயும் உப்பும்
கலந்தது தான் சில்லி வோட்கா...
மகன் கூறகூற பத்திக்கொண்டு வந்தது..
டேய் பட்டச்சாராயம் விற்கிறார்களா ..
என நான் கேட்க... அவன் பரிதாபமாக
கேட்கிறான் மாம் நீங்கள் பட்டைசாராயம்
குடித்திருக்கிறீர்களா என்று...😔😔
-
பிரியா விடை
கொடுத்தாலும்
பல பிரியமானவர்களை
உருவாக்கிக் கொண்டே
இருக்கிறது கல்லூரிகள் !
-
காலை பொழுது
கல்லூரியின் வாசல்
நோக்கி செல்லும் பயணத்தில்...
(வரிகள் கீழே)-
முதலாமாண்டு பயமுறுத்தியது
புதுப்புது மனிதர்களை
முன்னிறுத்தி
இறுதியாண்டு பயமுறுத்துகிறது
பழைய பழைய நட்பை
பிரிவதை நினைவூட்டி!!!-
தொலைத்ததை
தொலைத்த இடத்தில் தேட
முயற்சித்து
தோல்வியே அடைகின்றன
Re- Union சந்திப்புகள்!!!-
பேராசியரின் கேள்விக்கு
பதில் சொல்லி தப்பிக்க
ஒரு அறிவு ஜீவி நட்பை
எப்பவும் அனுப்பி வைக்கிறார்
ஆண்டவர்!!!?-
பிரிவுகளிலேயே
எப்பொழுதும்
தலைப்புச் செய்தியாகவே
நிற்கிறது
கல்லூரிப் பிரிவு!!!-
கரும் பலகை , பச்சை பலகை
PowerPoint என்று விதவிதமாய்
வகுப்புகள்....
அதிகமாய் கவனித்து படித்ததென்னவோ
நட்பை பற்றித்தான்!!!-