திட்டித் தீர்க்க தான் முடியவில்லை
ஆகையால் கொட்டித் தீர்க்கிறேன்
என் கவிகளின் வழியே
உன் மேல் கொண்ட காதலை...-
மொத்தமும் உனக்கு
என்கிறாய்! பிறகு ஏன்,
ஒரு முத்தம் கேட்டால்
இப்படி முறைக்கிறாய்..,-
பெண்ணே, எப்பொழுதும்
மண் பாா்த்தே நடவாதே!
பூமி வெட்கப்பட்டு,
பூகம்பம் ஏதும்
வந்துவிடப் போகிறது..,
-
மற்ற பெண்களைப் போல் நான் அல்ல
எனச் சொல்லியே முறைக்கிறாய்!
ஏதோ தொியாத ஒன்றை
சொல்லியது போல..,-
உயிர் இல்லாத உடல்
நிலா இல்லாத வானம்
இசை இல்லாத உலகம்
இதயம் இல்லாத காதல்
காதல் இல்லாத கல்லுாரி
கண்ணிர் இல்லாத கண்கள்
கண்கள் இல்லாத கடவுள்
தமிழன் இல்லாத படைப்பு
அழகு இல்லாத பெண்
பொய் இல்லாத கவிதை
👁️ போன்றது👁️
அந்த்ணன் விக்னேஷ்-
மறைந்திருந்து பார்க்கிறேன் அனுதினமும் மறுகணம் நீ என்னை பார்ப்பாய் என்பதையும் மறந்து...
-
ஒவ்வொரு
காத்திருப்பின்
முடிவிலும்
கடமைக்காக
வந்து நிற்கும்
வரம் தராத
இறைவன்
என்னவன் 😏-
மகிழ்வித்தாய் மகிழ்ந்தேன்
அழவைத்தாய் அழுதேன்
மறைத்தாய் மறைத்தேன்
நடித்தாய் நடித்தேன்
பொய்யாய் நீ
மெய்யாய் நான்....!
பிணைத்த பாசம்
பிரிய மறுக்கிறது...!
உன் பொய்யுரைகளில்
முழுதாய் நான்
பொய்த்துபோக
உன் நடிப்பு
வென்றது...!
நீ அரங்கேற்றிய
நாடகத்தில்
பேசும் ஊமையாய்
நான்...!
-Anu Bharathi.
-
அனலில் தகித்துக் கொண்டிருக்கும்
இரும்பினில், வார்த்தெடுத்து
நீ கொடுத்த ஆணிப் படுக்கையில்
அமைதியாய் உறங்கிக்
கொண்டிருக்கிறேன்!
எழுப்பி விட நினைத்து
தொட்டுவிடாதே!
உன் விரல் தரும் ரணம்
தாங்க முடியாது என்னால்..,-
விரல் விட்டு எண்ணிவிட
சிதறியது சில்லறையல்ல
மலரிதழ் தொட்டதும்
அவள் சிந்திய புன்னகையே!
-