எழிலான இன்பங்களை
தன்னுள் கொண்டே
அன்பான சிறகினை
மற்றவர்க்கு இரவல் தருவதே
அன்புடைமையின் தொடக்கம் ...
-
10 JAN 2020 AT 11:50
28 OCT 2020 AT 20:07
கொடுத்தவனுக்கு
கொஞ்சமாகவும்
மறுத்தவனுக்கு
மிதமிஞ்சியும்
கிடைப்பதே அன்பு!-
28 NOV 2017 AT 8:29
12 NOV 2019 AT 23:34
திகட்டுவதாய் உணர்த்திய
சமிக்ஞைகள் அறிந்த பிறகு
மொத்தமாய் விலகி இருக்கிறேன்
நீ விரும்பும் அளவுக்கு
அன்பை குறைக்கத் தெரியவில்லை
-
19 JUN 2019 AT 0:42
என் அம்மாவின்
புன்னகைக்குள்ளே
ஒளிந்திருக்கும்
அன்பொன்றே போதும்
என் மீதி வாழ்வைக் கடக்க-
26 JUN 2021 AT 8:08
எதுவாக வெளிப்பட்டாலும்
அன்பு அழகு தான்...
அன்பாக வெளிப்படும்
எதுவும் அழகு தான்...!-
28 APR 2021 AT 20:20
சொந்த காசில் சூனியம்
வைத்து கொண்ட உணர்வை
அடிக்கடி கொடுப்பது நாம்
பிறர் மீது வைக்கும் அளவில்லா
அன்பு...!-
28 MAY 2021 AT 8:04
இத்தனைக்கு பிறகும்
இன்னுமென்ன இழுத்து
பிடிக்கிறதிந்த வாழ்வை...
அறுந்து போக மறுக்கும்
அன்பின் இழையொன்று தான்...!-