QUOTES ON #அதிகாலைகனவுகள்

#அதிகாலைகனவுகள் quotes

Trending | Latest
15 SEP 2019 AT 7:17

உறங்கிக்கொண்டே
கண்டால்
அது கனவு...
விழித்துக்கொண்டு
கண்டால்
அது கவிதை...

-


15 SEP 2019 AT 7:15

அதிகாலை கனவுகளில்
நீ வருவது மட்டுமே
பலிக்கட்டும்....

-


6 JUN 2020 AT 6:15

அதிகாலை
ஒரு கனவு கண்டேன்..

என்ன கனவு ?

அதை உன்னிடம் சொல்லி
ஒருவேளை பலித்துவிட்டால் ?

அட.. சொல்.. என்ன கனவு ?

அதுவா.. உன் இதழ்களும்
என் இதழ்களும்
சத்தமின்றி சண்டையிட்டுக்
கொள்வது போல
ஒரு கனவு ! ❤

-


15 SEP 2019 AT 9:49


அதிகாலை
அழகான
கனவுகளை
பெரும்பாலும்
அலாரங்களே
அலைக்கழித்து
விடுகிறது!

-


16 SEP 2019 AT 7:43

அவள்
அணைப்பின்
கதகதப்பில்,
கனவே
கலையாதே....

-


15 SEP 2019 AT 8:05

அதிகாலை கனவுகளில் ...
எல்லாம் ..
அவன் கால் தடங்கள் ..
பத்திரமாக ..
அருகிலிருக்கும் ..
என் கை ரேகைகளோ ...
அவன் கைக்குள் பத்திரமாக ..
அணைத்திருக்கும் .
அவன் இதழ் ரேகைகளோ ..
என் கன்னங்களில் பத்திரமாக ..

-


15 SEP 2019 AT 7:30

அதிகாலை கனவுகள்
யாவும் ரம்மியமாய்
நீயும் நானுமாய்
ஓலைப் பாயில்
நித்திரையிலிருக்க
ஓயாமல் சொல்லும்
சயணச் சத்தம்
காற்றடிக்கும்
திசையெங்கும்
படபடவென அடிக்கும்
கதவுகள் சப்தத்திலிருந்து
எழாத சிரிக்கி இவள்
எழுந்துவிட்டேன்
உன் நகக் கீரலில்

-


15 SEP 2019 AT 6:58

அதிகாலை கண்ட கனவுகள்
உள்ளத்து ஆசைகளை
படம்பிடித்து காண்பிக்க;
நெஞ்சத்தின் நினைவுகள்
பலித்திடும் நாள் வருமென
எதிர்கால நிதர்சனங்களில்
அடியெடுத்து வைக்கிறேன்
நம்பிக்கையின் துணைகொண்டு!

-


15 SEP 2019 AT 6:56

அதிர வைத்தே நிழலாடி
நிஜத்தை உணர வைத்தே
சதிராடிய கனவுகள்
பலிதமென்ற சாத்திரக்
கூற்றில் கலைந்தே
சுவடு மாறிப்
போனதந்த கனவு

-


16 SEP 2019 AT 10:33

11 ம் வகுப்பு படிக்கும் போது ஒரு கனவு பெரிய பிரமாண்டமான கட்டிடத்தில் சொகுசாக அமர்ந்து வேலை செய்து கொண்டு கண்ணாடி சாளரத்தின் வழியாக பார்த்தால் முழு நகரமும் தெரிந்த மாதிரி கடவுள் அருள் கிட்டியது 🙏🙏.

இரண்டாவது படித்து முடித்து 5 வருடங்கள் ஆன பின்பும் இன்னும் நான் இன்ஜினியரிங் ல அரியர் எழுதற மாதிரியே ஒரு கனவு ...😝. டக்குன்னு விழித்துக்கொள்வேன் டேய் இன்னுமும் இந்த கனவு வருதே டா னு ...ச .😒

-