Rajeshwari Thendapani   (Rajeshwari Thendapani)
901 Followers · 80 Following

Joined 11 December 2018


Joined 11 December 2018
8 NOV 2022 AT 23:25

அழுவதால்
பயனா?
எழுவதால்
பயனா?
யென்றால்

அழுது
முடித் தபின்
எழுவதென்பேன்

-


14 JUL 2022 AT 8:01

அன்பின்
பொருட்டு
இழப்பை
பரிசளித்தவாறே
இயல்பாய்
நகர்த்திச்
செல்கிற
திந்த
வாழ்க்கை

இழப்பதும்
புதிதல்ல
அதைக் கடந்து
இயல்பாய்
வாழ்வதும்
புதிதல்ல



-


11 APR 2022 AT 15:08

ஓர் குவளை குளம்பி
ஓர் இளையராஜா பாடல்
கையிலோர் புத்தகம்
நினைவில் நீ
நிஜத்தில் தனிமை

இவை யாவும் -விடுத்து
இதமாய் ரசிக்க
கோடை மழை

போதுமானதாக
இருக்கிறது

-


9 APR 2022 AT 17:48

துக்கம்
எனை மென்று
முழுதாய்
திண்றுவிட்டால்
கூட பரவாயில்லை

மீதம் வைத்துவிட்டால்
என்ன செய்வதென்று
தெரியாது -நான்
தவிப்பது கொஞ்சம்
கொடுமையானது

-


8 APR 2022 AT 22:13

நாம் நேசிக்கும் ஓர்
இதயத்திற்காக
நூறு இதயங்களை
சொற்களால்
குத்திக் கிழிக்க
ஒரு போதும்
ஆமோதிப்பதே
யில்லை
இந்தக் காதல்




-


7 APR 2022 AT 20:02

இந்த இரவு
தான் எத்துனை
கருணையுடையதாய்
இருக்கிறது

நான் அழும் போதெல்லாம்
அதன் கரங்கள் எப்போதும்
என் கண்ணீரை துடைத்து
அணைத்துக் கொள்ள
எப்போதும் தயாராகவே
வுள்ளது...

அது மனிதர்களை
போல் கருணையற்று
யில்லை


-


6 APR 2022 AT 0:04

நானும் அவரும்
உரையாடிய
நேரங்கள்
அலாதியானது-அன்று
குறுஞ்செய்திகளில்
இன்று
காணொளி
அழைப்புகளில்


-


13 FEB 2022 AT 20:56

யாருமில்லா நேரமது
என் மூச்சுக் காற்று
சற்று அனலாகயிருக்க
உன்னிரு கரம் என்
முகம் தாங்கி இதழ்
பதிக்க வந்து நீ
என் கன்னம் கடித்து
காயம் செய்த மாயத்தை
எப்படி விலக்கிச் சொல்ல
செல்லக் கடிகளில்
முத்தத்தில் அடங்காதென்று

-


3 FEB 2022 AT 8:14

ஒரு காதல் என்ன
செய்யும்
காத்திருக்கும்
ஆரத்தழுவும்,
ஆறுதல் தரும்,
பிடிவாதம் பிடிக்கும்,
சண்டையிட்டபின்
மண்டியிடும்,
பேசாதிருக்கும்,
அழச் செய்யும்,
கண்ணீர் வற்றும்,
பிரிந்து செல்ல தோன்றும்
இவை யாவும் கடந்து
பின்னிறுதியில்
கரம் பற்றும்😍

-


9 AUG 2021 AT 23:13

இவ்வழகான
மழைக்கால
இரவில்
நீ என்னருகில்
இல்லாத
போதும்
நீ கொடுத்து
போன
முன்நெற்றி
முத்தங்கள்
கதகதப்பை
கூடிச் சென்று
உன்னருகாமையை
நினைவூட்டிச்
செல்கின்றன

வழக்கம் போல்
இன்றய இரவும்
காதல் இரவு தான்

-


Fetching Rajeshwari Thendapani Quotes