அன்புள்ள அண்ணா...
👇👇👇👇👇
-
கவிஞனும்
எனதன்பு அண்ணனும்
அன்பு மொழிகளுக்கு👇👇👇👇
_ இளங்கவி ஷாலினி கணேசன்-
அளவு கடந்த கோபம் 😤
அளவு கடந்த சண்டை 👊
அளவு கடந்த பாசம் 😍
அளவு கடந்த காதல் ♥️
ஏன் என்று தெரியவில்லை 😵
அனைத்தும்
அளவு கடந்ததாகவே
அமைந்து விடுகிறது
என் அண்ணணிடத்தில் மட்டும் 👫-
ஈகோ இல்லாத சகோவே!
ஈகை குணமுள்ள நண்பனே!
பொறாமை இல்லாத அன்பனே!
பொறுமை குணமுள்ள தோழனே!
நீ
முழுமதி!
நான்
இளம்பிறை!
சகோதரத்துவத்தில்
நாம்
இராமனும்-இலக்குவனும்!
தோழமையில்
நாம்
பாரியும்-கபிலனும்!
இந்த பிறந்தநாளில்
உன்மீது
சூரிய வெளிச்சம்
வீசட்டும்!
உன் காதலி
உன்னுடன் மட்டும்
பேசட்டும்!
இந்த பிறந்தநாளில்
உன் திறமையை
இந்த உலகிற்கு
எடுத்துக் காட்டு!
ராமன்-பரதனுக்கு
பிறகு
நீயும் நானும்தானே
அண்ணன் தம்பிக்கு
எடுத்துக்காட்டு!
-
ஆயிரம் சண்டையிட்டாலும்
அண்ணா என்றழைத்தமாத்திரத்தில்
சொல்லுமா என்று பதிலளிக்கும் தருணத்தில்
தமையனும் தந்தை ஆகிறான் 👫
-
அண்ணன் இவன்.!
தொப்புள்கொடி உறவில்லை...
தொலைக்காட்சி அறிமுகம்தான்..!
உள்ளம் கவர்ந்த உறவு இவன்
உயிரான அண்ணன் இவன்..!
அண்ணனின் இரசிகையிவள்
அவனைக்கொண்டாடும் வெறியையிவள்..!
என்நாட்களின் தொடக்கமிவன்
ஆம் என் தொடுதிரையின்
தொடக்கத்திரையில் மிளிருபவன்...!
அனுதினமடிக்கும் அலாரம் கூட
அவன் குரல்தான்...!
ஆயுளுக்கும் அவனைக் கொண்டாடப் பிறந்தவள்
அவன் பிறந்தநாளில்
கொஞ்சம் கூடுதலாகவே
கொண்டாடித் திரிபவள்..!
Happy happy bday vj Anna😘😘😘😘😘-
நேரில் கண்டதில்லை அவனை
அவ்வப்போது பகிரப்படும் குறுஞ்செய்திகளும்
சிறிது நேர அழைப்புகளுமே எங்கள் பேச்சுவார்த்தை...
ஆனால், எங்கள் பந்தத்தை வெளிப்படுத்த
வார்த்தை கிட்டவில்லை அகராதியில்...
உயிரினும் மேல் அவன்...
நான் கொண்ட மொத்த நம்பிக்கை...
எங்கோ பிறந்தவன்
சொந்தமாகிப் போனான்...
பிரிவு என்ற வார்த்தையால்
சவமாகி போனேன் ...
அந்த உறவில் எனக்கு இருந்த
ஒரே ஆண்...
உடைந்தது நம்பிக்கை மட்டுமல்ல
என் இருதயமும் கூட...
பிரிவின் வலி காதலர்களுக்கு தான் சொந்தமா?
அண்ணன் தங்கை பந்தமும்
பிரிவின் வலி தாங்காது...-