Sjfnn
-
Simple+dimple+shorty+chubby+smiley+curly|GIRL😊
❤ Love
📚 Book
🍃nature
🎶music
🚇Tr... read more
நாகரீக காலத்தில் நாகரீகமாய்
கவிஞனும் சுகமாய் பிரசவிக்கிறான்.
எண்ணங்களை எழுத்துக்களாய்த் தொட்டு
இணையம் வழியே கவிதைகளை இங்கு பெற்றெடுக்கும் உறவுகளுக்கு
உவமைகளின் உருவாமான கவிதை தின வாழ்த்துக்கள்-
கடுங்குளிரில் அடைப்பட்டு குளிர்சுகித்து
தன்னுயிர் வளர்த்தவன்
வெளிவந்த நொடியே சிறுஅனல்பட்டு
வியர்த்துருகியே மாய்கிறான்-
வேண்டிடா வரமாய் வந்த
தொய்வில்லா அன்பனே
என்றும் வாடிடா உறவான
உடன்பிறவா அண்ணன்நீயே
நாட்கள் கடந்தினும் எள்ளளவும்
குறைவில்லா அன்பின் களஞ்சியமே
என் இதயம் நிறைந்த அன்புகள்
என்றும் மகிழ்ந்திரு அண்ணா :)-
இறைவன் தன்
படைப்பிலே குறை
கண்டான்போலும்
திருப்திகொள்ள
அழகுபடுத்திகொண்டான்
தழும்புகளால்-
அடிமை தளைத்தெறிந்து சுதந்திரம்
மீட்கவே வங்கத்தில் சிங்கமொன்று
அவதனித்த நாளாம்
அன்னியனுக்கு பணியமறுத்து
பணிதுறந்து தேசத்தில் இராணுவ
தோற்றிய எம்மவனவன்
காலம்கடந்து பிறந்துவிட்டாய்
இல்லையெனில் மாவீரர்கேது சரித்திரம்
என சர்வாதிகாரியும் திகைத்தான்
உன் தீர்க்கமில்லா இறப்பைக்கூட
இன்றளவும் தோராயமாகவே
உலகம் கணிக்கவைத்தாய்
உயிரோ உடலோ மாய்ந்துபோயினும்
உன் ஆசைத்தீர தமிழனாய்
மறுப்பிறப்பெடு இந்நாளே
உன் பெயரை மாய்த்திட
அகிம்சையெனும் திரைமூடினும் என்றும்
பொய்ப்பதில்லை உன் தியாகம்-
வார்த்தையின் கூர்மையினை கூறிட இயலாது ,
உதிர்த்திட்ட உத்தமர்களும் காயம் கண்டிடாவரை !
-
உயிர்கொல்லும் ஆலையைமூட வேண்டிட்ட
உயிர்களின் செங்குருதி சுவைத்தாயே
அதிலும் கண்டாயோ அவர் உப்பின் சுவையையே!
நீதியில்லை பதின்மூன்று உயிர்க்கும் நிதியால் மதிப்பிடவே உயிர் மலிவென
தோட்டாக்கள் துளைத்திட்டாயோ?
எஞ்சிய உயிர்களுக்கெல்லாம் இங்கு -ஜனநாயகத்தில்
மிஞ்சியதெல்லாம் ஏமற்றங்கள்தானோ !?
அண்டை நாட்டில் வளம் கொழிக்க,எம் மக்கள் வளம் அழிக்கும் அரசு
என்று நிலைக்கும் எம்மக்களுக்கான ஆட்சி...!
-