மனிதன்
எத்தனை அழகாக
மாறுவேடம் போட்டாலும்
காலமும் சூழ்நிலையும்
அவனது
இயல்பு குணத்தைக்
காட்டி விடும்-
எண்ணங்கள் எழுத்து வடிவில்...
நல்லா இருக்கு...
நல்லா தான் இருக்கு...
இவ்விரண்டு சொல்லுக்கும் அர்த்தம் ஒன்று தான்...
கேட்கும் காதுகள் ஒன்று தான்...
ஆனால், ரெண்டும் வேறு தான் ...
அட ஆமாங்க...
'நல்லா இருக்கு'னு சொன்னா நெஜமாவே நல்லா இருக்குனு சொல்றாங்க...
ஆனா, 'நல்லா தான் இருக்கு'னு சொல்றாங்க
அப்டின்னா அவங்களுக்கு அதுல
திருப்தி இல்லை அல்லது பிடிக்கவில்லை
என்று அர்த்தம்...-
என்னை தூங்க வைப்பதும் நீயே
என் தூக்கம் கெடுப்பதும் நீயே
அருகில் இருந்தால் அரவணைத்து
தூங்கச் செய்கிறாய்
தொலைவில் இருந்து பிரிவால்
தூக்கம் கெடுக்கிறாய்
என் உயிர் காதலே...!
-
என்ன தான் நமக்கு சரி
என்று படுவதை
செய்ய நினைத்தாலும்
சுற்றி இருப்பவர்கள்
சொல்வதற்கு ஏற்றார் போல் 'Adjust'
செய்து தான் போக வேண்டும்...
ஏனெனில்
அது தான் "வாழ்க்கை"-
எந்த ஒரு செயலும்
பிடித்து ஈடுபாட்டுடன்
செய்ய வேண்டும்
பிறருக்கு பயந்து செய்தால்
அந்த உறவில் என்றுமே
அன்பு இருக்காது..!-
கரம் பிடித்த நாளில்
கள்வனே - உன்னை
எவ்வளவு பிடித்தது
என்று கேட்டால்
விடை தெரியாது...
ஆனால் இன்று,
அளவுகோல் கொண்டு
அளக்க முடியா அளவிற்கும்
உன்னை தாண்டி
எதையும் யோசிக்க முடியாமலும்
உன்னில் அவ்வளவு
பைத்தியம் ஆகிப் போனேனடா..!-
விட்டு விலகி தான்
சென்றேனே தவிர
மறந்து செல்லவில்லை...
மறக்கும் நிலையில்
நானும் இல்லை
மறக்க விடும் தொலைவில்
நீயும் இல்லை...
-
விழுந்த அடிகளும்
பட்ட அவமானங்களும்
கற்று தந்த பாடத்தினை
எந்த பாடசாலையிலும்
எப்பேர்ப்பட்ட ஆசிரியராலும்
கற்பிக்க இயலாது...-
குறித்த தேதிக்கு இடைப்பட்ட நாட்கள்
குறைவாய் உள்ளதென்று
எண்ணிய நாட்கள் போய்
இத்தனை நாட்களை
எப்படி கடப்போம் என்ற எண்ணம்
மேலோங்கிய பொழுது உணர்ந்தோம்
நாங்கள் கொண்ட காதலை..!-
Where some go upstairs
And some go downstairs
It's all in your decision
To decide your destination...-