இல்லாத குறைதான் பாட்டிக்கு.. இல்லாத குறைதான் அத்தைக்கு...இந்த 'இல்லாத குறைதான் 'என்ற வார்த்தையை நான் நிறைய பேர் சொல்ல கேட்டிருக்கிறேன். உண்மையில் எல்லாம் இருக்கும் உறவுகள் அன்பிற்கு வட்டிக் கணக்கு போடுகிறார்கள். இது மாதிரி இல்லாத குறையாய் இருக்கும் அத்தைகளிடமும்.. பாட்டிகளிடமும் தான் அன்பின் அடர்த்தி அதிகம் தெரிகிறது. அவர்களின் விசாரிப்பில் தான் உறவின் உன்னதம் புரிகிறது. வியர்வை நாற்றம் அடித்தாலும் அந்த முந்தானையில் முகம் புதைக்க நினைக்கிறது மனசு.
-
🎼️ Lyrics
🐿️ Haiku
💻 Software Engineer
🇯🇵 Japanese ❤
☪️️❤
ஏரி வேலையில்
எல்லோரும்
அந்த குழந்தையை
நெற்றியில் ஒத்தி கொள்கிறார்கள்
குழியெடுக்க மறந்து
குழந்தையை கொஞ்சுகிறார்கள்
வறண்ட ஏரியை
வாழ்க்கையை
இப்படிதான்
நனைக்கிறார்கள்-
I don't think is there something like family audience.No.. All are cinema audience. It's a complete shit strategy saying to pull all the families.. If a story makes you excited scene by scenes or if it triggers on what is going to happen next or if it has something that makes you to forget that 2hours then definitely all will come to watch a film as a family even if the the story has sex, nude, rude, violence.. Etc..
Vaarisu meant for Family audience but that has nothing in it to connect or understand as a family.. Thunivu is not targeted for family audience but it has many elements in it to be watched by a family.... All are cinema audience. If you give a good film, all will come as a family and if its not then no one will come no matter how many times you are barking 'குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி.... '-
'ஒரு கம்பெனியில
எவ்ளோ நாள் வேல செய்வ.. ? '
'அவர்கள் கொடுக்கிற
லேப்டாப்
ENTER button உடைகிற வரை-
மதியப்பொழுதுகளில் வண்டிகள் திணறும் நான்குமுனை வளைவில் யாரோ ஒருவர் சட்டையை மடித்துக்கொண்டு டிராபிக் போலிஸ் ஆகிறார். கூட்டம் பிதுங்கும் ஷேர் ஆட்டோவில் டிரைவர் சீட்டில் உட்கார்ந்த யாரோ பயணி ஒருவர் 'வா.. கேளம்பாக்கம் லாம் ஏறு.. 'என்று ஆரம்பித்து சில்லரை கூட மாற்றி தருகிறார். 'பாம்பு.. பாம்பு.. 'என்று எல்லோரும் அலறி குச்சி எடுத்து அடிக்க எத்தனிக்கையில் 'பாம்பு குட்டி போட மருகுது.. அடிக்காதீங்க.. 'என்று யாரோ ஒரு அம்மா தடுக்கிறாள்..
-
குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமை தராமல் அலைக்கழிக்கும் அந்த Turkish ஐஸ் கடைக்காரனைப் போல்தான் இந்த வாழ்க்கை ஏமாற்றுகிறது..
-
Fees
கட்டாதவர்களின்
லிஸ்ட் வருகிறது
குரல் நடுங்க
வாத்தியார் வாசிக்கிறார்
சிமெண்ட் மூட்டையின்
கொரமண்டல் ஷீட்டை
புத்தகத்திற்கு
பைண்டிங் செய்திருக்கும்
குண்டு மணிகண்டன்
வழக்கம் போலவே
வெளியே செல்கிறான்
-