யென்கனவில்
கால்பதித்து
சென்றாய்...
கால்தடம் வைத்தே
தெருவெங்கும்
தேடுகிறேன்...
யென்மன வாசனை
அணிந்திருக்கிறாயா
யென்று ?-
தேடலுக்கு
மத்தியில்
காதலும்
கவியமாகும்...!
காத்திருப்புக்கு
மத்தியில்
நொடிகளும்
யுகங்களாகும்...!
-
நிலவின் அழகில்
உந்தன் நினைவுகளை
நினைத்து கொண்டு இருக்கும்
என்னை நீ காண வருவது
எப்போது ...
-
உன் நினைவே - சுமக்கும்
என் கனவு!!!..
உன் நிழலே - தொடும்
என் நிஜம்!!..
உன் ரசனையே - தேடும்
என் கவி!!!...
-
தேடும் முன்பே தொலைத்துவிட்டேன்
என் வார்த்தைகளை
அவ(ள்/ன்) மௌனத்தில்...
-
வெயிலின் வெப்பம் தாங்கா
பூமியை எண்ணி அழும் வானம்...
மழையின் வோவ்வோரு முத்த துளிகளையும்
அனுபவித்து சிரிக்கும் பூக்கள்..
முழுதாய் நனைந்த பிள்ளையை
திட்டிகொண்டே தன் முந்தானை நுனியில்
தலையை துவட்டிகொண்டே கோபிக்கும் தாய்...
கவிதை எழுதுவதற்காக எடுத்த பேனாவயும் மறந்து
மழையை காதலிக்கும் கவிஞன்...
ஒரு துளியும் மிச்சம் வைக்காமல்
அனைத்தையும் அருந்தும் நிலத்தின் தாகம்...
கொட்டும் மழையில் கோடை என்பதையும் மறந்து
குடை பிடிக்கும் அதிசய வானவில்...
சிந்தும் துளியை தன்னில் சிறைபிடிக்க ஆர்வமாய் சிப்பி...
இத்தனை இருந்தும் என் நினைவுகளை ஈர்த்தது...
கொட்டி தீர்கும் மழையில் எதையோ
தேடி திரியும் தென்னங்கூட்டு குருவியின் தேடல்...
அதன் தேடலில் தொலைத்த
என் நினைவுகளை தேடிக்கொண்டிருக்கும் நான்...
தேடலில் தொலைந்த இதயத்தை
ஏனோ தேடி தேடி ஈர்கிறது தேடல்...-
என் கண்ணாளனே !!
நீ அந்த மண்ணிலே புதியதை விதைப்பவன்
என் கண்ணாளனே !!
நீ உலகுக்கே பசி தீர்ப்பவன்
என் கண்ணாளனே !!
நீ பல பேரின் வாழ்த்தை பெற்றவன்
என் கண்ணாளனே !!
இத்தனைக்கும் சொந்தக் காரன்
இனி நீ எனக்கும் நான் உனக்கும்
என சொந்தமாய் வாழ போகிறோம்
என் கண்ணாளனே!!!!🌱🌱🌱🙂🙂🙂♥️♥️♥️-
எதையுமே தொலைக்காமல் !
தேடுதலை மட்டும்
துரிதபடுத்தியிருக்கிறது !
வாழ்க்கை !-