gowri shankari   (Gowri Mohan)
41 Followers · 23 Following

Joined 21 October 2020


Joined 21 October 2020
20 APR AT 19:43

கற்பனையில் நிறைந்தவனை
கவிதைகளில் ஒளித்து வைத்தேன் - அன்று
என் கவிதைகளில் நிறைந்தவனை
நேரில் கண்டுக்கொண்டேன் - இன்று!!!

-


1 DEC 2024 AT 1:19

விட்டு விட்டு பொழியும்
மழையென அவளின் கோபம்;
பலத்த காற்றேன வீசும்
அவனின் அன்பு:

ஃபெஞ்சல் புயலின்
கண்ணாமூச்சி ஆட்டமாய்
அவர்களின் காதல்...

-


1 DEC 2024 AT 0:36

ஃபெஞ்சல் புயலின்
கண்ணாமூச்சி ஆட்டமாய்
அவனின் வருகை;
சொல்லி செல்கிறது
தாமதத்தின் வீரியத்தையும்
காத்திருப்பின் சுவாரசியத்தையும்....



-


10 NOV 2024 AT 13:24

முன்னுரையாய் அவளின்
முத்தம்😘...

-


18 OCT 2024 AT 20:39

இன்னும் இயங்கிகொண்டுதான் இருக்கிறது
இவளின் உலகம்🌎
பிடித்தவர்களின் பிணைப்பிலும்
பிரியமானவர்களின் பிரிவிலும்
பழகியவர்களின் பாசத்திலும்
பழக நினைப்பவர்களின் நேசத்திலும்
தனிமையின் தேடலிலும்
கூட்டத்தின் கொண்டாட்டங்களிலும் -
இன்னும்
அனுபவிக்கவும் ஆராயவும்
எவ்வளவோ
என்ற சிந்தனையில்
இயங்கி கொண்டே இருக்கிறது
இவளின் உலகம்🌏

-


20 SEP 2024 AT 17:13

என் அன்பொன்றும்
பணமல்ல
அதை என்னிடமே
செலவு செய்து விடு...

-


20 SEP 2024 AT 17:01

விட்டுவிட்ட கேள்விக்கு
சதத்தை தந்து மதிப்பிட்டாள்
தலைவி
தன் புன்னகையென்னும்
திருத்தல் முறைக்கொண்டு :)
தலைவன் மறுகூட்டலுக்கு
விண்ணப்பிக்காமலே!!!

-


20 JUL 2024 AT 18:05

மண் மேலே
நிலவில் வடை சுடும் பாட்டி
கதை தொடங்கி
காதலில் சுகம்
பிரிததிலா? (அ) புரிதலிலா?
என நீ என்னிடம் கேட்டது வரை...


-


19 JUL 2024 AT 15:14

புல்லின் மீது
ஒட்டிக்கொள்ள எண்ணிய
பனித்துளி
எதிர்பாராத கதிரவனின்
வரவைக் கண்டு
வெட்கத்தில் மறைந்ததா? (அல்ல)
காதலில் கரைந்ததா?
புரியாத புதிராய்
இயற்கை நடத்தும் காதல் நாடகம்!!!

-


11 JUL 2024 AT 16:31

தனக்கென குழந்தையை
ஈன்றெடுத்த தருணத்தில்!!!
(தாய்மை)







தன் குழந்தைக்கு
தான் குழந்தையாகும் தருணத்தில்.
(முதுமை)

-


Fetching gowri shankari Quotes