தமிழ் கவிஞன்   (பிரியா👍🙂🍫)
758 Followers · 304 Following

Joined 10 March 2020


Joined 10 March 2020

மனதில் ஏனடா காயம்
அவள் இல்லை என்பதாலா?
இல்லை - அவள்
இருந்திருக்க கூடாதா
என்பதில் தான்!

-



வானம் நிலவுக்கு
சிங்காரம் செய்ததோ!
வெட்கம் - பெளர்ணமி

-



தரப்பட்ட அத்தனை
பரிசுகளும்
தரப்படாத அந்த
பரிசுக்காக
காத்திருந்ததாம் - "எதிர்பார்ப்பு "

-



நேசித்த போது,
ரசித்து ரசித்து தேறினான் !!
வீழ்ந்த போது,
நினைத்து நினைத்து தேற்றினான் !!!

-



வலிகளை எப்படி மறந்தாய்,
வழிகளை பார்த்து
பயணம் செய்ததால்...

-



அவள் யார் உனக்கு,
அவன் : கூரிய கத்தியாலும்
வெட்ட முடியாத வைரம் ங்க அவ !!

-



எதிர்பார்க்காதவை எல்லாம் நடக்க,
எதிர்பார்த்தவை எல்லாம் அசந்து விடுகின்றன ....

-



பேரன்பை பெரும் போது புலப்படாதது!!
பேரன்பிற்கு ஏங்கும் போது புலராத்தளிர் ஆகிறது ...

-



பயணங்கள்;
கொண்டு சேர்க்கும்
இடம் வெவ்வேறானாலும் -
எடுத்து செல்லப்படுவது
ஒரே நினைவுகள் தானே !!!

-



மௌனங்கள் எல்லாம்
புரிதலென்றால்!!!
இடைவிடா உரையாடலில்
இடை நின்ற மெளனம் மட்டும்
பிரிவாகிடுமா?

-


Fetching தமிழ் கவிஞன் Quotes