ஆசையாய் ஜிமிக்கி வாங்கி தந்து. .
ஜிம்மிக்கி கம்மல் நடனமாடிய
பெண் அழகு எனத் தெரியாது
சொல்லி விட்டேன்
இன்று வரை அதை அணியாது
பழிவாங்குகிறாய் நீ....-
17 DEC 2018 AT 6:16
24 JUL 2021 AT 9:07
காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது, அவள் பேரழகி தான்...!
-
10 JUN 2017 AT 16:13
எப்படி சொல்வேனடி
நான் சொல்லும் கதைக்கெல்லாம்
ஜிமிக்கி கன்னத்தில் உரச
நீ தலையாட்டுவது அழகு.....
நாளெல்லாம் அதை ரசிக்க
நானும் தயார்தான்....
ஆனால்...
கதைக்கு எங்கே செல்ல.....?-
24 AUG 2021 AT 16:52
கைபேசியைக் காதோரம்
வைத்துப் பேசாதே பெண்ணே!
உன்னை விட உன் ஜிமிக்கி
என்னோடு அதிகம் பேசுகிறது!...-
12 MAY 2022 AT 10:22
மஞ்சள் மயில் ஒன்று கண்டேன்
அவள் காதோரம் ஆடும் ஜிமிக்கிகளை
தோகை என கொண்டேன்...
தோகையின் ஆட்டத்தில்
விண் குளிர்ந்ததோ மண் குளிர்ந்ததோ தெரியவில்லை
இந்த வாலிபனின் மனம் குளிர்ந்தது....
ஜிமிக்கி காதலனாய்
ரசனையின் ஒரு பகுதி....🖤-